மகளிர்மணி

சமையல் டிப்ஸ்..

7th Oct 2020 06:00 AM | - அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

ADVERTISEMENT

 


சமையலறையில் பல்லிகளின் தொல்லை இருந்தால் வெங்காயச் சருகுகளைப் போட்டு வைத்தால் ஓடி விடும்.

 உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய்விட்டால் சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சரியாகிவிடும் 

வீட்டுக்குப் பெயிண்ட்  அடித்து வாடை  அடித்தால் வீட்டின் மூலையில் சிறிது வெங்காயம் நறுக்கிப் போட்டால் பெயிண்ட் வாடை மறைந்துவிடும் 

ADVERTISEMENT

 வறுத்த பட்டையை பொடிசெய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும் 

 மிளகாய் அரைக்கும்போது சரியாக அரைபடாது.முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கலாம் 

பாகற்காய் குழம்போ கூட்டோ வைக்க சிறுசிறு துண்டுகளாக்கி கேரட்டைப் போட்டால் பாகற்காயின் கசப்பு தெரியாது 

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்ந்து கிளற வேண்டும்!

சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைக்கவும். இந்தப் பொடியைப்போட்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும். திக்காகவும் இருக்கும் 

பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பும் டேஸ்ட்டும் கூடும் 

கடலைமாவு, அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சோடாமாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்

மதியம் அரைத்த மாவை இரவில் இட்லி,தோசை செய்ய வேண்டுமென்றால் மாவை மூடி வெயிலில் வைக்கவும். அல்லது மாவு உள்ள பாத்திரத்தை சூடான நீரிலும் வைக்கலாம். மாவு புளித்து இட்லி, தோசைக்கு சரியாக இருக்கும் 

மாவில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வார்த்தால் தோசை சாஃப்ட்டாக, டேஸ்ட்டாக இருக்கும். 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT