மகளிர்மணி

3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள்! 

7th Oct 2020 06:00 AM |  - ரிஷி

ADVERTISEMENT

 

கரோனா  பொதுமுடக்கத்தால்,  அனைத்தும் பாதிக்கப்பட்டதில்,  குழந்தைகளின் கல்வியும் ஒன்று. கடந்த மார்ச் மாதம் முதல்  பள்ளிக் கல்லூரிகள்  மூடப்பட்டுள்ள நிலையில், மழலையர் கல்வி முதல் மருத்துவப் படிப்பு வரை அனைத்தும் ஆன்லைன் முறையில் மாறியிருக்கிறது.  இதை எதிர்கொள்வது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மிகப்பெரிய சவாலாகவே  உள்ளது.  ஆனால்,  இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,  மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்  கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி ரகுநாத். 

ரகுநாத், கலாதேவி தம்பதியின் மகளான ஆர்த்தி அடிப்படையில் எம்எஸ்சி பயோகெமிஸ்ட்ரி மாணவி. இவர் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்துள்ளார். 
அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் படிப்புகளை முடித்ததற்காக "யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம்' மூலம் இவர், உலக சாதனை படைத்தவர்கள்  பட்டியலில் இணைந்துள்ளார். 

இது குறித்து ஆர்த்தி கூறியதாவது: 

ADVERTISEMENT

""ஆன்லைனில் எத்தனையோ படிப்புகள் உள்ளன.  அவற்றின் பாடத்திட்டங்களும் கால அளவும் ஒவ்வொன்றுக்கும்  மாறுபடும்.  இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகள் குறித்து  என் பேராசியரே எனக்கு  அறிமுகம் செய்து வைத்தார். மேலும் எனது கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி முகமத்,  ஆன் லைன் கோர்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஹனீஃபா கே ஜி, வகுப்பின் பேராசிரியர் நீலிமா ஆகியோர் எனக்கு உதவினார்கள். இவர்களின் ஆதரவுடன் சில வாரங்களிலேயே நான் வகுப்புகளை முடித்துள்ளேன்''  என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT