மகளிர்மணி

குறைந்த முதலீட்டில் லாபம்!

25th Nov 2020 06:00 AM |  - ரிஷி

ADVERTISEMENT


"வீட்டில் இருக்கும் பெண்கள் காலை முதல் மாலை வரை ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்களது வேலைகளை திட்டமிட்டு முடித்துவிட்டு ஓய்வு நேரத்தை உருவாக்கிக் கொண்டுதங்களுக்கென்று ஏதேனும் ஒரு வேலையை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ். அந்த வகையில் மூலிகை டீ எப்படி தயாரித்து கைத் தொழிலாக்கிக் கொள்ளலாம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

முருங்கைக் கீரை டீ

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை, சீரகம்.

முருங்கைக் கீரையை நன்கு அலசி மிக்ஸியிலிட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். பொடித்த கீரையின் அளவுக்கு சரிபாதியாக சீரகத்தை கலந்து வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை அரவை மிஷினில் கொடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை டீ பேக்காக தயார் செய்து கொள்ள வேண்டும். இதனை தினமும் காலை வேளைகளில் சுடு தண்ணீரில் போட்டு குடித்து வர, பிரஷர் குறைந்துவிடும்.

ADVERTISEMENT

முருங்கை மரம் வைத்திருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம். மரம் இல்லாதவர்கள், முருங்கை மரம் வைத்திருப்பவர்களிடம் நேரடியாக குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அருகம்புல் டீ:

தேவையான பொருட்கள்: அருகம்புல் - 1 கைப்பிடி, மிளகு - 4, 1 சிட்டிகை - சீரகம் இதுதான் அளவு.

அருகம்புல்லை வாங்கி வந்து சுத்தம் செய்து நன்கு காய வைத்து பின்னர் அரைத்து டீ பேக் செய்து கொள்ளவும். இதற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அருகம்புல் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

இதுபோன்றே செம்பருத்தி, ஆவாரம் பூ, சங்கு பூ போன்ற மூலிகைகளிலும் செய்து கொள்ளலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் இந்த மூலிகை டீ பேக்கை தயாரித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து அதன் தரத்தை ஆய்வு செய்து பின்னர், உணவு பொருள்களுக்கான மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து விற்பனையை தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் கனிசமான லாபம் தரும் நல்ல கைத்தொழில் இது.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT