மகளிர்மணி

பூசணி விதையின் மருத்துவ மகிமை!

25th Nov 2020 06:00 AM | - சுந்தரி காந்தி 

ADVERTISEMENT

 

பூசணி விதை என்றால் மஞ்சள் பூசணியின் விதையை குறிக்கும். பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. 

பூசணி விதைகளில் உள்ள சத்துகள்:

இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

ADVERTISEMENT

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மி.லி. என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

ஆரோக்கியமான கொழுப்பு இவ்விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும் "செரொட்டோனின்' (serotonin) என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம்  வரும்.

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT