மகளிர்மணி

குமாரி  கமலா

25th Nov 2020 06:00 AM | - ராஜேஸ்வரி

ADVERTISEMENT

குமாரி கமலாவின், "கொஞ்சும் சலங்கை' பட நடனத்தை மறக்கவில்லை என்றாலும், அவரை அநேகமாக மறந்தே விட்டோம். தற்போது குமாரிகமலாவுக்கு வயது 87. அமெரிக்காவில் மகனுடன் வசிக்கிறார். கணவர் கார்ட்டூனிஸ்ட் லட்சுமண் உடனான மனமுறிவு ஏற்பட்டு, 1964-இல், ராணுவத்தை சேர்ந்த மேஜர் லட்சுமி நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் திரையுலகிலிருந்தும் நிரந்தரமாக விலகினார். 1983-இல் கணவர் இறந்தபின், மகனுடன் அமெரிக்க சென்று நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் "ஸ்ரீபரத கலாலயா' என்ற நாட்டியப் பள்ளியை தொடங்கி, பலருக்கு பயிற்சியளித் தார். எந்த காலத்திலும் எளிமையானவர்.

80-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள கமலா, பரத நாட்டியத்தில் ஈடு இணையற்றவர். 6 இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இதையெல்லாம் விட சிறப்பு..

எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின்போது நாட்டியம் ஆடினார். 1944-இல் "ஜகதலப் பிரதாபன்' என்ற திரைப்படத்தில் இவர் ஆடிய பாம்பு நடனம். அந்த காலமனிதர்களால் இன்றும் பேசப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT