மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

25th Nov 2020 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

 

மகிழ்ச்சியில் கண்ணம்மா!

விஜய் டிவியின் பிரபலமான தொடர்களில் ஒன்று "பாரதி கண்ணம்மா', இதில் கண்ணம்மாவாக நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர், அறிமுகமான முதல் தொடர் இதுதான். ஆனால், நடிக்க தொடங்கிய சிறிது நாள்களிலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இந்த தொடரின் கதைப்படி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா, தனது கணவர் பாரதியை பிரிந்து வீட்டைவிட்டு வெளியே வந்து விடுகிறார். வீட்டைவிட்டு வெளியேறியவர், அடுத்து எங்கே போவது என்று தெரியாமல் சாலைகளில் நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி அமைப்பு இருந்தது. இப்படி இவர், தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த மீம் கிரியேட்டர் ஒருவர், "இந்தப் புள்ளய இன்னும் எவ்வளவு தூரம்யா நடக்க விடுவீங்க'ன்னு வடிவேலு பாணியில் ஒரு மீம் போட, தற்போது அந்த மீம் வைரலாகிவிட்டது. இதனால், கண்ணம்மாவை வழியில் பார்க்கும் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க தொடங்கிவிட்டார்களாம். இதனால் மகிழ்ச்சியில் இந்த எல்லா புகழும் மீம் கிரியேட்டர்ஸூக்கே என்று சொல்லி வருகிறாராம் ரோஷினி.

 

ADVERTISEMENT

அம்மா ரோலில் இளம் நடிகை!

சீரியல் நடிகைகளில் சிலர் சின்ன வயதிலேயே அம்மா ரோல்களில் நடிக்க வந்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நித்யா தாஸூம் சீரியல் அம்மாவாகியிருக்கிறார். "மனதோடு மழைக்காலம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நித்யா. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர், திருமணத்துக்குப் பிறகு தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

2009- ஆம் ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான "இதயம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் தொடர்ந்து "காற்றினிலே வரும் கீதம்', "பைரவி', "அழகு' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

தற்போது, சன் டிவி-யில் புதிதாக ஆரம்பமாகியிருக்கும் "கண்ணான கண்ணே' தொடரில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடிக்கிறார் நித்யாதாஸ். இதன் மூலம் இளம் வயதிலேயே அம்மா கதாபாத்திரம் ஏற்றுள்ள நித்யாவுக்கு, நடனம், திரைப்படங்கள் பார்ப்பது, இசைக் கேட்பது, பயணம் செய்வது அனைத்தும் மிகவும் பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT