மகளிர்மணி

சூழலியல்  விருது பெற்ற தமிழக மாணவி!

25th Nov 2020 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வினிஷா கூறியுள்ளதாவது:

"சிறு வயதில் என் அப்பா வாங்கிக் கொடுத்த பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய படித்து வளர்ந்ததால், அறிவியல் சார்ந்து நிறைய தகவல்களைக் கற்றுக்கொண்டேன். அது முதல் எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதனால், அவ்வப்போது அறிவியல் சார்ந்த ஆராய்சிகளில் ஈடுபடுவேன். சில ஆண்டுகளுக்கு முன் தானாக இயங்கும் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்து விருதுகள் பெற்றேன். அதனையடுத்து சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்ற அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். இதை முழுமையாக வடிவமைக்க இரண்டு மாத காலம் தேவைப்
பட்டது.

சூரியசக்தி மூலம் இயங்கும் இந்த இஸ்திரி பெட்டி 100 ஏ.எச் திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இது முழுமையாக மின்னேற்றம் அடைய 5 மணி நேரம் சூரிய ஆற்றல் தேவை. அப்படி ஒருமுறை மின்னேற்றம் ஆன பிறகு, இஸ்திரி பெட்டியை, தொடர்ந்து ஆறு மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது அடுத்தகட்டமாக, கரோனா சூழலுக்கு ஏற்ப தானாக இயங்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளேன்' என்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT