மகளிர்மணி

இட்லி பஞ்சு மாதிரி இருக்க!

18th Nov 2020 06:00 AM | - ஆர்.கீதா,  அலுவா.

ADVERTISEMENT


இட்லி மாவை தட்டில ஊற்றி பிரஷர் குக்கரில் வேக வைப்பதானால் காஸ்கெட் போடாமல் மூடி வைத்துப் பாருங்கள், இட்லி பஞ்சு போல மெத்தென்று வரும்.

பாகற்காயை வாங்கி வந்தவுடன் இரண்டாக நறுக்கி வைத்தால் இரண்டு நாள்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

ஒரு தேக்கரண்டி சட்னியை ஒரு தட்டில் போட்டதும் அதிலிருந்து தண்ணீர் தனியே வரக்கூடாது. கெட்டியாக அப்படியே இருக்க வேண்டும். இதுவே சரியான சட்னிபதம்.

பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள், கடுகு, தேங்காய்த் துருவல், மூன்றையும் சேர்க்க பஜ்ஜி சுவை பிரமாதமாக இருக்கும்.

ADVERTISEMENT

வாழைப்பூவை சுத்தம் செய்யும் போது தூள் உப்பைக் கைகளில் பூசிக் கொண்டால் கை விரல்களில் கறை படியாது.

வெங்காய சாம்பார் செய்யும்போது, தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க ருசியும் மணமும் பிரமாதமாக இருக்கும்.

உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத் தூளாக்கி அதில் தயிரைச் சேர்க் கவும். திடீர் தயிர் பச்சடி தயார்.

பாலை லேசாகச் சூடுபடுத்தி அரைதேக்கரண்டி சர்க்கரையையும் கரைத்து உறை ஊற்ற.. தயிர் கெட்டியாக உறையும். புளிக்கவும் செய்யாது.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT