மகளிர்மணி

பிடித்ததை மட்டுமே செய்கிறேன்!

11th Nov 2020 06:00 AM | - சலன்

ADVERTISEMENT

 

கரோனா பொதுமுடக்கம் உலகின் ஓட்டுமொத்த தொழில்களையும் முடக்கியது என்றால், மற்றொருபுறம், ஏராளமான யூடியூப் சேனல்கள் உதயமானதும் உண்மையே. வீட்டில் அடைப்பட்டு கிடந்தவர்கள் பலர், தங்களது பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் யூடியூப் சேனலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல.. அந்த வகையில் நடிகை விஜி சந்திரசேகரும் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதுகுறித்து விஜி சந்திரசேகர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

உங்களது யூடியூப் சேனல் பற்றி சொல்லுங்கள்?

பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல், பொழுது போக்காக தொடங்கியதுதான் எனது யூடியூப் சேனல். "ஆங்ஹ்ர்ய்க் ம்ங்'” என்று பெயர் வைத்துள்ளேன். இதில், செய்திகள் மற்றும் பிரபலங்களின் பேட்டிகள் உள்ளன. தற்போது இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

ஆன்லைனில் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறீர்களா?

நடிப்பு பயிற்சி எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. எனக்கு என்ன தெரியுமோ அதை செய்து காண்பிக்கிறேன். இதை தவறாகப் புரிந்து கொண்டு, சுமார்600 பேருக்கு மேற்பட்டவர்கள் நடிப்பு பயிற்சியளிக்கும்படி கேட்டனர். இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து இவர்களில் ஜப்பான், கத்தார், யு.கே., சிங்கப்பூர், மலேசியா, ஒடிசா, மதுரை, பொள்ளாச்சி மற்றும் சென்னையில் இருக்கும் சுமார் 60 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு, எனக்கு தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன் அவ்வளவுதான். இவர்களில் 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

1981-இல் "தில்லுமுல்லு' படத்தில் அறிமுகமாகிய நீங்கள், இத்தனை ஆண்டுகளில் குறைந்த படங்களில் தான் நடித்துள்ளீர்கள். என்ன காரணம்?

உண்மைதான். எனது 40 ஆண்டு திரைப் பயணத்தில் இதுவரை 35 திரைப்படங்கள், 21சின்னதிரை தொடர்கள், ஒரு சில குறும்படங்கள்தான் நடித்திருக்கிறேன். வருவதை எல்லாம் நான் ஒப்பு கொள்வதில்லை. என் மனதிற்குப் பிடித்ததை மட்டுமே செய்கிறேன். நான் இயக்குநரின் நடிகை. இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை செய்துவிட்டு போகக் கூடியவள்.

நீங்கள் நடித்ததில் உங்கள் மனதிற்கு நெருக்கமான படங்கள் எவை?

சமீபத்தில் கெüதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குயின்(ணன்ங்ங்ய்) வெப் சீரிஸ்ஸில் நடித்தது பிடித்திருந்தது. அதுபோன்று நான் நடித்தப் படங்களில் "ஆரோகணம்', "மதயானை கூட்டம்', "வெற்றிவேல்' ஆகியப் படங்கள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வு?

"ஆரோகணம்' படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம் நடந்தது. அந்தப் படத்தில் நான் பிச்சையெடுப்பது போன்ற ஒரு காட்சி இருந்தது. இதை என்னிடம் எப்படி சொல்வது என்று தயங்கியபடியே இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், அவரது உதவியாளரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக்கேட்ட நான், நேரேஅவரிடம் சென்று, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டு, நீங்கள் காமிராவை போய் கவனியுங்கள், என்று சொல்லி விட்டு, எந்த தயக்கமுமில்லாமல், பிச்சைக்காரர்களோடு போய் அமர்ந்து விட்டேன். அன்று படப்பிடிப்பு நடந்த இடம் கபாலீஸ்வரர் கோயில் வாசலில். அங்கே என்னையும் சேர்த்து சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருந்தனர். நான் உட்கார்ந்ததும் எனக்கு அருகில் இருந்தவர், அவருக்குப் போட்டியாக வந்துவிட்டேன் என்று என்னைப் பார்த்து முறைத்த படி திட்டத் தொடங்கினார்.

அசுத்தமான அந்த இடத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் அமர்ந்திருந்தேன். என் தட்டிலும் சில காசுகள் விழுந்தன. இயக்குநர் விருப்பப்படி காட்சி எடுக்கப்பட்டவுடன், என் தட்டில் விழுந்த காசுகளை என்னைத் திட்டிய அந்த அம்மாவிடமே கொடுத்து விட்டு, வந்தேன். அதை எப்பவும் மறக்கவே முடியாது.

இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதினார். அதில் என்னைப் பற்றி குறிப்பிடும்போது "ஐ க்ண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க் யண்த்ண் ஹய்க் ஹ்ர்ன் ழ்ங்க்ண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க் ட்ங்ழ். நட்ங் ம்ஹக்ங் க்ஷங் ல்ழ்ர்ன்க்' என்று எழுதி இருந்தார். இந்த வரிகள் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT