மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

14th May 2020 10:27 PM | - சி.ஆர்.ஹரிஹரன்

ADVERTISEMENT

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.

பாயசம், கேசரி போன்றவைக்கு அரிசி, ரவை வெந்த பிறகே சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.

பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து கொதிக்க வைத்து வடிகட்டவும். பனீர் கிடைக்கும். பனீர் போக எஞ்சியுள்ள திரவத்தைக் கொட்டாமல் சூப், குருமா போன்றவற்றில் சேர்க்கவும். சப்பாத்தி பிசையவும் பயன்படுத்தலாம்.

கறுத்தப் புளியில் சாம்பார் வைத்தால் சாம்பார் கறுப்பாக இருக்கும். அதற்கு சிறிது தேங்காய்ப்பால் விட்டால் கறுப்பு நிறம் மாறி சாம்பாரும் டேஸ்ட்டாக இருக்கும்.

ADVERTISEMENT

தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து விடும். தோசையின் சுவையும் அலாதிதான்.

உருளைக்கிழங்கை பொரியல் செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.

இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் தோலுடன் ஒரு உருளைக்கிழங்கைப் போட்டு மூடி வைத்தால் அப்படியே மிருதுவாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT