கரோனா பாதிப்பினால் தற்போது பெரும் பாலான பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க பெண்கள் ஒரு சில உணவு வகைகள் கடைப்பிடித்து வந்தால் போதுமானது. அந்த வகையில் என்ன வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்று பார்ப்போம்:
பசலைக்கீரை
பெண்கள் நிச்சயம் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.
தானியங்கள்
பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
மிளகாய்
மிளகாயில் உள்ள கார தன்மை உடல் எடையை குறைக்கும். மேலும் அதில் உள்ள காரம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.
ராஸ்பெர்ரி
பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
நட்ஸ்
நட்ஸில் பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது.
ஆரஞ்சு
உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட் இருப்பதால் அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சை மற்றும் தேன் கலந்த ஜூஸ் பெண்களுக்கான ஒரு சிறந்த பானம். எலுமிச்சையும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல் கொழுப்புகளை கரைத்துவிடும்.