முகக் கவசம் வீட்டில் ஒருவருக்கொருவர் மாறிவிடாதிருக்க பெயரை சுருக்கமாக நூல் கொண்டு தைத்தோ அல்லது பேனா வால் எழுதியோ வைத்துக் கொள்ளுங்கள்.
முகக் கவசம் மாட்டும் போது காது பக்கமாக மாட்ட வேண்டும்.
முகக் கவசத்தின் வாய் பக்கத்தை கையால் தொடக்கூடாது.
முகக் கவசத்தைக் கழற்றும்போது காது பக்கமாக உள்ள நாடாவை பிடித்து கழட்ட வேண்டும். வாய் பக்கமாக அகற்றக் கூடாது.
முகக் கவசத்தைத் துவைக்கும்போது டெட்டால் கலந்த வெந்நீரில் முக்கி எடுத்து உலர வைக்க வேண்டும்.
முகக் கவசம் காய்ந்தவுடன் ஒரு கவரில் பத்திரப்படுத்த வேண்டும்.
முகக் கவசம் கிழிந்தாலோ அழுக்காகி விட்டாலோ அதை நன்றாக கத்தரித்து குப்பை கூடையில் போட வேண்டும்.
சிறிய முகம் கொண்டவர்கள் சிறிய சைஸ் முகக் கவசம் வாங்கி அணிந்தால் சரியாக பொருந்தியிருக்கும்.
முகக் கவசத்தைத் தெருவோர கடைகளில் வாங்குவதைவிட ரெடிமேட் கடை, துணி கடைகளில் கவரில் பத்து, ஐந்து என மொத்தமாக வாங்குவதே சுகாதாரமானது. நடைபாதை கடைகளில் முகத்தில் போட்டு பார்க்க சொல்லி விற்கிறார்கள். நம்மைப் போல மற்றவர்களையும் போடச் சொன்னால் கவசத்தின் சுகாதாரம் போய்விடும்.
காட்டன் துணி முகக் கவசம், பனியன் துணி மாஸ்க் நல்லது. வியர்வை உறிஞ்சும். மூச்சு காற்று சூட்டை தணிக்கும்.
முகக் கவசத்தில் காது பக்கம் எலாஸ்டிக்கைவிட துணியால் தைத்த நாடாவே சிறந்தது.
குழந்தைகளுக்கு பறவை படம், கார்ட்டூன் படம் போட்ட முகக் கவசம் போட்டால் மிகவும் விரும்புவார்கள்.
பெண்கள் தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற கலரில் மேட்சாக முகக் கவசம் போட்டால் எடுப்பாக இருக்கும்.
கறுப்பு நிற பெண்கள் லைட் கலர் முகக் கவசம் போடலாம். வெள்ளைநிற பெண்கள் டார்க் கலர் முகக் கவசம் அணிந்தால் எடுப்பாக காட்டும்.
முகக் கவசம் நாம் வீட்டிலேயே தைத்து தயார் செய்வதாக இருந்தால் அதில் பல டிசைன் பூக்கள் போடலாம். சமிக்கி, கல், முத்துக்கள் ஒட்டலாம்.
முகக் கவசம் இனி நம் வாழ்வோடு இன்றியமையாததாகி விட்டதால் அதை சுத்தமாக வைத்து கொள்ளலாம்.