மகளிர்மணி

கோடைக்கேற்ற கூல் டிப்ஸ்...

17th Jun 2020 10:00 AM | - ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT


தினமும் 3 லிட்டர் காய்ச்சி ஆறிய தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

-வெயிலுக்கு முன்பு வீட்டு வேலைகள், வெளிவேலைகளை முடித்துவிட வேண்டும்.


-தினமும் இரண்டு முறை வேப்பிலை போட்ட தண்ணீரில் குளித்தால் நல்லது.


-குளிப்பதற்கு சோப்பைவிட பயத்த மாவு மஞ்சள்தூள் கலந்த கலவை நல்லது.

ADVERTISEMENT


-இளநீர், நுங்கு, பதநீர், எலுமிச்சை ஜூஸ் தினமும் குடித்தால் நீர் இழப்பை சரி செய்யலாம்.


-முந்தின நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்தால் உடல் வெப்பம் தணியும்.


-சமையலில் கீரை, சௌசௌ, பரங்கிக்காய், வெள்ளரி போன்ற நீர்க்காய்களை சமைக்க வேண்டும்.


-மோர், தயிர் தாராளமாக சாப்பிடலாம்.


-தலைக்கு ஷாம்பு போடுவதை விட ஊற வைத்த வெந்தயம், பாசிப்பருப்பு, செம்பருத்தி சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.


-வெளியில் போகும்போது, கையில் குடை, தலையில் தொப்பி கட்டாயம் இருக்க வேண்டும்.


-ஆரஞ்சுப் பழம், கிர்ணிப்பழம், முலாம்பழம், திராட்சை, மாதுளம்பழம் போன்ற பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.


-காலையில் நீராகாரம் எனப்படும் பழைய சோற்றில் முந்தினநாள் இரவே நீர் ஊற்றி வைத்து சாப்பிடலாம்.


-நெல்லிக்காய் ஒன்றை சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்று வந்தால் நாக்கு உலராது.


-எலுமிச்சை ஜூஸில் உப்பும், சர்க்கரையும் கலந்து குடித்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.


-குழந்தைகளுக்கு சந்தனப் பவுடர், சந்தனத்தை நீரில் குழைத்துப் பூசுவது போன்றவை செய்து வந்தால் வியர்க்குரு வராது.

ADVERTISEMENT
ADVERTISEMENT