மகளிர்மணி

வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து !

8th Jan 2020 03:20 PM

ADVERTISEMENT

பாலாவின் "பரதேசி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்விகா. "மெட்ராஸ்', "கபாலி', "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதற்கிடையில் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் இரண்டில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 இதைத்தொடர்ந்து படவாய்ப்புகள் குவியும் என நினைத்த ரித்விகாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் தற்போது விதவிதமான போட்டோ ஷுட் செய்துள்ளார் ரித்விகா, புத்தாண்டையொட்டி வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது டிவிட்டர் பக்கத்தில், "எப்போ தான் கல்யாணம் பண்ண போறீங்க? எப்ப தான் உங்க படம் ரிலீஸ் ஆகும்? என்ன படம் தான் இப்ப பண்றீங்க? ஒரு படம் கூட இப்ப பண்ணலயா?' இந்த மாதிரி கேள்விகளை 2020-இல் தவிர்ப்பது என வாக்குறுதி எடுத்து 2020-யை சந்தோஷமாக செலபிரேட் பண்ணுவோம்' என தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல என பதில் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT