மகளிர்மணி

சோம்பின் மருத்துவக் குணங்கள்!

8th Jan 2020 03:54 PM

ADVERTISEMENT

சோம்பைத் தூளாக்கி ஆறு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை நீரில் போடவும். சிவப்பு ரோஜா இதழ்கள் சிலவற்றை அதில் போட்டுக் கொதிக்க விடவும். தினமும் இரண்டு வேளைகள் குடிக்க ரத்த சோகை குணமாகும்.
• வறுத்த சோம்பை சாப்பிட்ட பின்பு மென்று விழுங்க அஜீரணம், வாயுக் கோளாறுகள் நீங்கும்.
• ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள், சுக்குத்தூள் சிறிது இந்துப்பு கலந்து தூங்கப்போகும் முன்பாக ஒரு தேக்கரண்டி எடுத்து தண்ணீருடன் கலந்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
• 1தேக்கரண்டி இஞ்சி விழுது, 2 தேக்கரண்டி சோம்புத்தூள் இதில் தேன் கலந்து பருக பேதி நிற்கும்.
• ஒரு டம்ளர் பாலில் 4 தேக்கரண்டி சோம்பு கலந்து கொதிக்க விடவும். பத்து நிமிடம் கொதிக்கவிட்டு ஆறியபின் குடிக்க அடி வயிற்றில் ஏற்படும் வலி குணமாகும்.
• சோம்பை வெறும் வாயில் மென்று தின்ன நெஞ்செரிச்சல் குணமாகும்.
"சக்தியூட்டும் உணவுகள்' என்ற நூலிலிருந்து
-நெ.இராமன், சென்னை

 

 குழந்தை நோஞ்சானாக இருந்தாலும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் ரத்த சோகை இருந்தாலும் டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடக் கொடுங்கள் என்பதே, கோதுமை பிரட், சமைக்காத கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், அத்திப்பழம் போன்ற பழ வகைகள் காலிஃபிளவர், ஓட்ஸ், முந்திரி போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.
 முருங்கை மரத்தின் பட்டையில்  கசியும் பிசினை  சேகரித்து காய வைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.  இதில் அரை தேக்கரண்டி எடுத்துப் பாலில் சேர்த்து தினமும் பருகினால் இளமைத் தோற்றம் மாறாமல் இருக்கும்.
 வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் எடுத்து, பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
- ஜோ .ஜெயக்குமார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT