மகளிர்மணி

சொந்த ஊருக்கு திரும்பி சென்ற கீதாஞ்சலி!

8th Jan 2020 03:18 PM

ADVERTISEMENT

திருமுருகன் இயக்கிய "நாதஸ்வரம்' சீரியலில் முக்கியமான கேரக்டரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. காரைக்குடியைச் சேர்ந்தவர் இவர். "நாதஸ்வரம்' தொடர் நிறைவடைந்ததும், அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வர, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து செட்டிலானார். சீரியல்களைத் தொடர்ந்து சில படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், "நிறம் மாறாத பூக்கள்' , "ராஜா ராணி' என இரண்டு சீரியலிலும் கமிட் ஆனார். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களுக்கும் ஷூட்டிங் நாள்களை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட, "ராஜா ராணி'யிலிருந்து விலகினார். இந்நிலையில் "நிறம் மாறாத பூக்கள்' தொடர் நிறைவடைய, சீரியல்கள் எதுவும் கைவசம் இல்லாததால், காரைக்குடிக்கே திரும்பியுள்ளார் கீதாஞ்சலி. "வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிட்டாங்க, அதனால் மறுபடியும் சென்னை வருவதாக இருந்தால், திருமணத்திற்குப்பிறகுதான் வருவேன்'' என்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT