மகளிர்மணி

நாஸாவுக்குப் போகும் அரசுப் பள்ளி மாணவி..!

1st Jan 2020 12:02 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும் ஆதனக்கோட்டை அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமி விளையாட்டாக ஆன்லைன் தேர்வு ஒன்று எழுத... அமெரிக்காவின் நாஸாவிலிருந்து "வாம்மா... வந்து நாஸாவைச் சுற்றி பார். விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடலாம்..' என்று அழைப்பு வந்துவிட்டது. அந்த ஆன்லைன் தேர்வு நாஸாவுக்கு இந்திய மாணவர்கள் வருகை தர நடத்தப்படும் போட்டியாகும்.
 ஆனால் ஜெயலட்சுமி தான் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர். பள்ளி முடிந்ததும், எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதுடன், முந்திரி பருப்புகளையும் விற்று வருமானம் தேடுகிறார்.
 "அப்பா எங்களை விட்டு போய்விட்டார். எப்போதாவது பணம் கொஞ்சம் அனுப்புவார். மன நோயாளியான அம்மா. சின்னத் தம்பி. இவர்களை நான்தான் பார்த்துக் கொள்ளணும். இந்தத் தேர்வை அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் எழுதுவதில்லை. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான் எழுதுவார்கள். தேர்வாவார்கள். அடுத்த மே மாதம் நாஸாவுக்குப் போகணும். போய் வரச் செலவுகள் சுமார் இரண்டு லட்சம் ஆகும் என்கிறார்கள்.

பலரது உதவியால் பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன். பேச்சு ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றுவிட்டேன். இப்போது நன்றாக ஆங்கிலம் பேச வருகிறது.
 மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு கொடுத்துள்ளேன். ஸ்பான்சர்களையும் எதிர்பார்த்து இருக்கிறேன். பள்ளியில் நன்கு படிக்கிற மாணவி என்று பெயர் வாங்கியுள்ளேன். போட்டிகளிலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன். யாராவது ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் ஜெயலட்சுமி.
 - அங்கவை

ADVERTISEMENT
ADVERTISEMENT