கேத்ரினா கைப் நடிக்க வந்த புதிதில் அக்ஷய் குமார், சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின்னர் தன்னுடைய சம வயதுடைய ரன்பீர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆதித்யா ஆகியோருடன் நடித்து வந்தார். தற்போது தன்னை விட பத்து வயது குறைந்த இளம் நடிகர்களான இஷான் கத்தர், சித்தார்த் சதுர்வேதி ஆகியோருடன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டை பொருத்தவரை வயதான நடிகைகள் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்வது புதிதல்ல. முன்னாள் நடிகையான மாலா சின்கா, நந்தா ஆகியோர் முறையே சஞ்சய்கான், சசி கபூருடனும், வகிதா ரஹ்மான், ராஜேஷ் கன்னா மற்றும் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளனர். அண்மையில் கரினா கபூர் தன்னைவிட இளையவரான இம்ரான்கானுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.