மகளிர்மணி

சமையல் சமையல்!

30th Dec 2020 06:00 AM | - எஸ்.பிரியம்வதா, சென்னை.

ADVERTISEMENT

 

பயறு கட்லெட்

தேவையானவை:

பயறு - அரை கிண்ணம்
உருளைக்கிழங்கு - 5-6
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2-3
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி
கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
சோளமாவு - கால் கிண்ணம் (கரைத்தது)
திராட்சை - 2 தேக்கரண்டி
பிரெட் க்ரம்ஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை:

பயறை ஊற வைத்து முளைக் கட்டி எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதில் உப்பு, சிறிது மிளகாய்த்தூள் போட்டு கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்யை விட்டு சீரகம் தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பின் அதில் முளைக்கட்டிய பயறை போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். பின் அதில் துருவிய கேரட், மிளகாய்ப்பொடி, கரம்மசாலா பொடி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

மசித்த உருளைக்கிழங்கை ஒரு கிண்ணம் மாதிரி செய்து அதனுள் பயறு மசாலாவை வைத்து மூடி சோளமாவில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான பயறு கட்லெட் தயார்.

அவல் - ஓட்ஸ் பிசிபேளாபாத்


தேவையானவை:

அவல் - 1 கிண்ணம்
ஓட்ஸ் - அரை கிண்ணம்
கேரட், பீன்ஸ், காலிப்ளவர்,
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,
பட்டாணி, குடை மிளகாய் - ஒன்றரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
மசாலாவுக்கு
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 8-10
பட்டை - 1 துண்டு
கொப்பரை தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
நல்லஎண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவல் - ஓட்ஸ் தனிதனியாக ஊற போடவும். மசாலா பொருள்களை சிறிது எண்ணெய்விட்டு வறுத்து எடுத்து, கொப்பரை தேங்காய் சேர்த்து பொடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு எல்லா காய்கறிகளையும் போட்டு நன்றாக வதக்கவும் பின் அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி கரைத்துவிட்டு கொதிக்க விடவும். காய்கறி வெந்த பின் அதில் ஊற வைத்த அவல் - ஓட்ஸ், வெந்த பருப்பையும் சேர்த்து நன்றாக கலந்து பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். பின் நெய்யில் கடுகு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து கொட்டி கிளறினால் அவல் -ஓட்ஸ் பிசிபேளாபாத் தயார்.

 

மாங்காய் பாகற்காய் கறி


தேவையானவை:

மாங்காய் - 1
பாகற்காய் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3-4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சிறிது எண்ணெய்யில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம் வறுத்துப் பொடி செய்யவும். தனியா வேண்டுமானால் சேர்க்கலாம். மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து மாங்காய், பாகற்காய் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறி போடவும். பின் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி வேக விடவும். நன்றாக வெந்தபின் சிறிது வெல்லம் சேர்த்து கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும்.


சின்ன வெங்காயம் குருமா

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2 கிண்ணம்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
முந்திரி - 8
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயம், தக்காளி, முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு, பட்டை எல்லாம் சேர்த்து நைஸôக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான எண்ணெய்விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மீதி எண்ணெய்விட்டு அரைத்த மசாலாவை வதக்கவும், எண்ணெய்ப் பிரிந்த பின்னர் அதில் வதக்கி வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அரை கிண்ணம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சிறிது வற்றின பின் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி சப்பாத்தியுடன் பறிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT