மகளிர்மணி

சமையல் சமையல்!

2nd Dec 2020 06:00 AM | - லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT

 

பனீர் டிலைட் க்ரேவி

தேவையானவை:
பனீர் துண்டுகள் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 8
தனியா - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 50 கிராம்
கசகச ô - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளித்த தயிர் - 2 தேக்கரண்டி
சோம்பு, சீரகம் - சிறிது
பட்டை கிராம்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 150 மி.கி.

செய்முறை: மிளகாய் வற்றல், மல்லி, கசகசா, முந்திரி பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெய்விட்டு, தனித்தனியாக வறுத்து, தயிர் சேர்த்து நைஸôக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும், பனீர்த் துண்டுகளைப் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.

ADVERTISEMENT

பின்னர், அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்துப் போட்டு சிவக்க வதக்கிக் கொண்டு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். மீதியுள்ள எண்ணெய்யை விட்டு அரைத்தவைகளைப் போட்டு 10 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். தேவையான தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு பனீரைக் கொட்டி மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நூடுல்ஸ், சாத வகைகளுக்கு இது நன்றாக இருக்கும்.


சப்ஜி ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 500 கிராம்
நிலக்கடலை வறுத்தது - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பச்சைமிளகாய் - 10
எலுமிச்சம் பழம் - 1
பூண்டு - 50 கிராம்
உப்பு - தேவையானவை
முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
சீரகம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 500 மில்லி

செய்முறை: நிலக்கடலைத் தோலை நீக்கி, சுத்தம் செய்து பொடித்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிடவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, விதை நீக்கிக் கொள்ளவும். முந்திரிபருப்பை சிறிது நெய்விட்டு பொன்னிறமாக வறுத்து இரண்டாகப் பிளந்து வைக்கவும். அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்துக் களைந்தெடுத்து 2 தேக்கரண்டி எண்ணெய், சிறிது உப்பு , ஊற வைத்த நிலக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் வடித்து தட்டில் கொடிப் பரப்பி வைக்கவும்.

பூண்டை தட்டி வைக்கவும். சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய், பாதி நெய் விட்டு காய்ந்ததும் தட்டிய பூண்டைப் போட்டு வதக்கி கொண்டு, வெங்காயம், சிறிது உப்பு ஆகியவற்றையும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் சீரகத் தூளைக் கலந்து சற்று நேரம் புரட்டிக் கொள்ளவும். பிறகு தக்காளி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து சுருள வதக்கிக் கொண்டு, சாதம், முந்திரி தேவையான உப்பு கலந்து நன்றாகப் புரட்டிக் கிளறி உதிரியானதும் இறக்கவும். சன்னா மசாலா, தயிர் பச்சடியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

 

மஷ்ரூம் டிலைட் ஃப்ரைடு ரைஸ்


தேவையானவை;
பாஸ்மதி அரிசி - 500 கிராம்
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: காளான்களை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவி தண்ணீரை வடிக்கவும். அரிசியை ஒருமணி நேரம் ஊறவைத்து களைந்தெடுத்து, 2 தேக்கரண்டி நெய், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் வடித்து, தட்டில் கொட்டிப் பரப்பி வைக்கவும். வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நைஸôக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைக்கவும்.

பின்னர், கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய், பாதி நெய் ஆகியவற்றைவிட்டுக் காய்ந்ததும், சீரகத்தை போட்டுப் பொரித்துக் கொண்டு, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து சிவக்க வதக்கிக் கொண்டு, தட்டிவைத்த பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அவை வதங்கியதும் மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைப் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் நறுக்கிய காளான் துண்டுகளையும், சிறிது உப்பையும் சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். மீதியுள்ள எண்ணெய்யை ஊற்றி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அவையாவும் நன்றாக வதங்கியதும், சாதத்தையும் மீதியுள்ள நெய்யையும் போட்டு 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சன்னா மசாலா, தயிர் பச்சடியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

 

நூடுல்ஸ் பட்டர் ஃப்ரை

தேவையானவை:
நூடுல்ஸ் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
தக்காளி விழுது - 3 தேக்கரண்டி
கார்லிக் சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு - 100 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்

செய்முறை: வெங்காயத்தை நைஸôக நறுக்கி, சிறிது வெண்ணெய் போட்டு வதக்கி வைக்கவும். முந்திரி பருப்பை சிறிது வெண்ணெய்விட்டு வறுத்து பொடியாக உடைத்துக் கொள்ளவும். நூடுல்ûஸ வேக வைத்து வடித்து எடுத்து வைக்கவும்.

பின்னர், வாணலியில் வெண்ணெய்யை விட்டு அதில் தக்காளி விழுது, கார்லிக் - சில்லி சாஸ்களைப் போட்டு சற்று புரட்டிக் கொண்டு, கரம் மசாலாத் தூள், சிறிது, உப்பு போட்டு புரட்டவும். அதில் நூடுல்ûஸப் போட்டு இரண்டு நிமிடம் புரட்டிய பின், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் பின்னர், மீதியுள்ள வெண்ணெய்யைச் சேர்த்து புரட்டி முந்திரிப் பொடியைத் தூவிக் கலந்து இறக்கி விடவும். தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT