மகளிர்மணி

சின்னதிரையிலிருந்து விலகும் நடிகை!

2nd Dec 2020 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT

சமீபத்தில்  சன் தொலைக்காட்சியில்  தொடங்கிய  "பூவே  உனக்காக' புதிய தொடரின்  மூலம் சின்னத்திரையில்  அறிமுகமாகியிருந்தார்  நடிகர் லிவிங்ஸ்டனின்  மகள்  ஜோவிட்டா.  தொடர்  தொடங்கி  சில மாதங்களே ஆன நிலையில்,  தற்போது  அந்தத் தொடரில் இருந்து  ஜோவிட்டா விலக இருப்பதாக  கூறப்படுகிறது. 

இதனால் கதையில் சில மாற்றங்கள்  கொண்டு வந்து விரைவில் அவரது  கதாபாத்திரத்தை முடிவுக்குக்  கொண்டு வர  எண்ணியிருக்கிறார்களாம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு குழு. 

ஜோவிட்டா இப்படி திடீர் என்று  விலகக் காரணம்,  பெரியத்திரையில் இருந்து  நல்ல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும், மேலும் அவருக்கு திருமண ஏற்பாடுகள்  நடைபெறுவதாலும்தான் என சின்னதிரை வட்டாரங்கள் கூறுகிறது. 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT