மகளிர்மணி

விளம்பரத்தில் நடிக்க மறுத்தவர்

4th Sep 2019 11:01 AM

ADVERTISEMENT

பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி, தன்னுடைய உடலை அழகாகவும், கச்சிதமாகவும் வைத்துக் கொள்ள இயற்கை முறையில் யோகா பயிற்சிகளை செய்வதோடு, அதுகுறித்து மற்றவர்களுக்கும் அறிவுறுத்தி வருகிறார். அண்மையில் உடலை இளைக்க வைக்கும் மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பர படமெடுக்க இவரை அணுகியபோது, நடிக்க மறுத்துவிட்டார். "பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்த கூறி யாரையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. இதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. யோகா, மிதமான உணவு, நேரம் தவறாமல் சாப்பிடுவது போன்றவை மூலமாகவே உடல் எடையை குறைக்கலாம்'' என்கிறார் ஷில்பாஷெட்டி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT