மகளிர்மணி

ஆலுவேராவின் அற்புத குணங்கள்!

4th Sep 2019 11:23 AM

ADVERTISEMENT

அழகு சாதனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆலுவேராவுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. காற்றாழை சமீபகாலமாக பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக கருதலாம். ஆனால் பண்டைய கிரேக்க நாட்டில் இதை ஒரு தெய்வீக தாவரமாக கருதினார்கள். இந்தியாவில் மட்டுமின்றி மெக்சிகோ, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலும் இதை மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாவீரன் அலெக்சாண்டர், காயமடைந்த தன் படைவீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கிறிஸ்டோபர் கொலம்பஸ் தன்னுடன் கப்பலில் வந்த ஊழியர்கள் காயத்தை ஆற்றவும் ஆலுவேராவை பயன்படுத்தியதாக சரித்திர குறிப்புகள் உள்ளன.
 சரும பராமரிப்பு தொடர்பான இந்திய மருத்துவ இதழ்களில் ஆலுவேராவில் 75 விதமான சத்து நிறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன. விட்டமின், என்சைம்ஸ், மினரல்ஸ், சர்க்கரை, கொழுப்பு, அமிலம், அமினோ அமிலம், சாலிகிலிக் அமிலம் என பல சத்துகள் ஆலுவேராவில் அடங்கியிருப்பதால் அல்ட்ரா வயலட் கதிரியக்க பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளுக்கு ஆலுவேரா தீர்வாகிறது.
 வெளி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
 ஆலுவேரா பற்பசை பல் சொத்தை, ரத்தகசிவு, ஈறுவீக்கம் போன்றவைகளை எதிர்க்க உதவுகிறது. விஷ தன்மையை முறிக்கும் குணமுள்ளதால் வெளி ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுகிறது. பல் கூச்சத்துக்கு நல்லது. ஆலுவேராவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் மவுத்வாஷ் நல்ல பலனை அளிக்கக் கூடியவை.
 காயத்தை ஆற்றவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும் ஆலுவேரா ஜெல்லை உட்கொள்வதன் மூலம் இதில் உள்ள கொலஜென் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைத்து சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. கொலஜென் சருமம் விரிவடைவதை குறைக்கும் சக்தி கொண்டதாகும்.
 ஜீரண சக்தியை அதிகரிக்கும்
 ஆலுவேரா சுலபமாக மலத்தை வெளியேற்றும் மலமிளக்கியாக பலனளிப்பதோடு மலச்சிக்கல் இல்லாமல் செய்கிறது. வாயு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை போக்கவும். அமிலங்களால் வயிற்றில் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவும் உதவுகிறது.
 உடல் எடையை குறைக்க உதவுகிறது
 ஆலுவேராவை உலர வைத்து பொடி செய்து உட்கொள்வதன் மூலம், உடல் கொழுப்பை கரைத்து எடையை குறைப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆலுவேரா ஜூஸ் உடலில் இழந்த சக்தியை திரும்ப பெறவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 வடுக்கள் மறைய
 ஆலுவேரா, நீண்ட நேரம் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. இதில் உள்ள ஈரத்தன்மை சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், எரிச்சல், நமைச்சல் போன்றவைகளை குறைக்கிறது. சருமத்தில் தோன்றும் வடுக்கள் மறையச் செய்யும் தன்மை ஆலுவேராவில் உள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 ஆலுவேராவை எப்படி உட்கொள்வது?
 ஆலுவேரா ஜூஸ் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பாக மார்க்கெட்டில் சுலபமாக கிடைக்கின்றன. பழச்சாறுகளில் ஆலுவேரா ஜெல்லை சேர்த்து பருகலாம். காய்கறிகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 -அ.குமார்
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT