மகளிர்மணி

டிப்ஸ்.. டிப்ஸ்...

16th Oct 2019 12:25 PM

ADVERTISEMENT

* ஃபிரிட்ஜின் உள்ளே ஃபிரீசரில் ஐஸ் கட்டிகள் படிவதை தடுக்க ஃப்ரீசரில் சிறிதளவு உப்பைத் தூவி வைத்து விடுங்கள். 
* கதவிடுக்குகளில் சிறிதளவு டால்கம் பவுடரைத்தூவி வைத்தால் கதவு கீறிச் சத்தம் எழுப்புவதை தவிர்க்கும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகிலோ அல்லது கட்டிலின் அடியிலோ வைத்து விடுங்கள் கொசுக்கள் ஓடிப்போய்விடும்.
* வீட்டில் கரண்ட் இல்லாதபோது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டில் பொருத்தி அதை ஒர் ஆழமான பாத்திரத்தில் வைத்து, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னால் வைத்து விட்டால் வெளிச்சம் வீடு முழுக்க பிரகாசமாக இருக்கும் .
* கிழிந்துப்போன ரூபாய் நோட்டு அல்லது புத்தகங்களை முட்டையின் வெள்ளைக்கருவால் ஒட்டலாம். ஒட்டியது தெரியாமல் இருக்கும்.
* புதிதாக பெயிண்ட் அடித்த அறையினுள் ஒரு பக்கெட் தண்ணீரை இரவு முழுவதும் வைத்துவிடுங்கள் பெயிண்ட் வாசனை நீங்கும்.
* மிதியடிகளில் படிந்துள்ள கறையைப் போக்க அவற்றின் மீது உருளைக்கிழங்கை வெட்டி தேய்க்கவும் அதன் ஈரம் காய்ந்ததும் மென்மையான பிரஷால் தேய்த்து விட்டால் மிதியடி புதிது போலாகும்.
* ஜன்னல் கண்ணாடிகளைத் தண்ணீரில் நனைத்து பிழிந்த பேப்பரில் துடைக்கவும்.இப்படி வாரம் ஒருமுறை செய்து வர அவை பளபளப்பாக இருக்கும்.
* கண்ணாடி டம்ளர்கள் மற்றும் பாத்திரங்களை வினிகர் கலந்த தண்ணீரால் கழுவி துடைத்து வைத்தால் எத்தனை நாட்களானாலும் மெருகு குறையாமல் அப்படியே இருக்கும் .
* ஒன்றுக்குள் ஒன்று மாட்டிக் கொண்டுள்ள டம்ளர்களை பிரித்து எடுக்க மேலே உள்ள டம்ளருக்குள் வெந்நீரை ஊற்றவும் தனியே பிரிந்து வரும்.
* பால் காய்ச்சும் பாத்திரத்தில் அதே அளவிலான ஒரு தட்டை கவிழ்த்துப் போட்டு விட்டு பால் காய்ச்சுங்கள் பாத்திரம் தீய்ந்து அடி பிடிக்காமல் இருக்கும்.
* உபயோகித்த பிறகு ஒவ்வொரு முறையும் குக்கரின் கேஸ்கட்டைக் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்துவிடுங்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்.
* எலுமிச்சம் பழங்களை பிரவுன் நிற பேப்பரில் போட்டு வைத்துவிட்டால் பதினைந்து நாட்களானாலும் அப்படியே இருக்கும்.
* புதிதாக வாங்கிய செருப்பு , ஷூ கடிக்கிறதா? அதனுள்ளே வாழைப்பழத்தோலை ஒரு நாள் இரவு வரை வைத்துவிடுங்கள். மறுநாள் கழுவிவிட்டு அணிந்தால் கடிக்காது .
- ஜோ.ஜெயக்குமார்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT