குடும்ப பாங்கான கதைகள் என்றால் தயாரிப்பாளர்கள் முதலிடம் கொடுக்கும் சோனாக்ஷி சின்காவுக்கு திருமணத்தைப் பற்றி நினைக்க நேரமில்லையாம். "நான் ஓய்வின்றி படங்களில் நடித்து வருவது என் பெற்றோர்களுக்குத் தெரியும். நான் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் என்னுடைய பணியை செய்து வருகிறேன். என் அம்மாவும் மற்ற அம்மாக்களைப் போல் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பதுண்டு, நேரம் வரும்போது நடக்கும். இதற்காக நான் யாரையும் காதலிப்பதாக நினைக்க வேண்டாம்'' என்று கூறும் சோனாக்ஷியை, அவருடைய அப்பா சத்ருகன் சின்கா மட்டும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பதில்லையாம்.
- அருண்