மகளிர்மணி

சமையல்! சமையல்!

2nd Oct 2019 12:15 PM

ADVERTISEMENT

டபுள் பீன்ஸ் சுண்டல்

 தேவையான பொருட்கள்
உரித்த டபுள் பீன்ஸ் - ஒரு கிண்ணம்
சோம்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: உரித்த டபுள் பீன்ûஸ உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த டபுள் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

பச்சைப்பயறு பனீர் சுண்டல் 

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்
முளைகட்டிய பச்சைப்
பயறு - ஒரு கிண்ணம்,
பனீர் துருவல்-முக்கால் கிண்ணம்
இஞ்சித் துருவல்- ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள்-ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-2 
சீரகம்-கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறை ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

கோதுமை சுண்டல் 

தேவையான பொருட்கள்
முளைகட்டிய கோதுமை - ஒரு கிண்ணம்,
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமையுடன் தேவையான அளவு, உப்பு சேர்த்து, (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

டிரை ஃப்ருட்ஸ் சுண்டல் 

தேவையான பொருட்கள்
முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கிண்ணம்
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, 
உலர் திராட்சை - தலா ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
பேரீச்சை - 10
உப்பு- தேவையான அளவு
செய்முறை: முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து , ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீட்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய்த் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

கொண்டைக்கடலை பழ சுண்டல்

தேவையான பொருட்கள்
முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை - ஒரு கிண்ணம்
ஆப்பிள் - ஒன்று
மாதுளை முத்துக்கள் -2 தேக்கரண்டி
திராட்சைப் பழம் -20
வாழைப்பழம் - ஒன்று
சாட் மசாலா -ஒரு தேக் கரண்டி
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய கொண்டைக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் டேஸ்டி கொண்டைக்கடலை பழ சுண்டல் ரெடி.

சோயா சுண்டல்

தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் - 
ஒரு கிண்ணம்
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலாத்தூள்- ஒரு தேக்கரண்டி
பட்டை- சிறிய துண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சோயா பீன்ûஸ வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். சோயா சுண்டல் தயார். 
எஸ். சரோஜா

ADVERTISEMENT
ADVERTISEMENT