மகளிர்மணி

வயதான பாத்திரத்தில் பூமி பெட்னேகர்!

31st Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசம் ஜோஹரி என்ற கிராமத்தில் வசிக்கும் சந்த்ரோ மற்றும் பிரகாஷி ஆகிய இருவயதான பெண்கள், தங்களது 50-ஆவது வயதிலிருந்து குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களாக விளங்கி வருவதால், "உலகிலேயே குறிபார்த்து சுடுவதில் வயதான பெண்கள்' என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்களைப் பற்றி எடுக்கப்படும் "சாந்த் கி ஆங்க்' என்ற படத்தில் வயதான பெண்களாக தாப்ஸி பன்னுவும், பூமி பெட்னேகரும் நடிக்கின்றனர். "வயதான பெண்ணாக மேக்-அப் போட்டு நடிப்பது சிரமமாக இருந்தாலும், இது ஒரு சவாலான பாத்திரம் என்பதால் தயங்காமல் ஒப்புக்கொண்டேன்'' என்கிறார் பூமி பெட்னேகர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT