மகளிர்மணி

சமையல்! சமையல்!

31st Jul 2019 10:39 AM

ADVERTISEMENT

சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்பிரிங் ரெஸ்டாரண்ட்டில் "சிகிரி க்ளோபல் கிரில்' என்னும் ஏசியன் கிரில்ட் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில் பலவகையான பிரபல ஆசிய உணவுகள் சைவம் மற்றும் அசைவ உணவுகள் உணவு பிரியர்களுக்காக பரிமாறப்படுகிறது. அவற்றிலிருந்து சில உணவு செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

க்ரில்ட் மலாய் பனீர்

தேவையானவை: பனீர் - 250 கிராம்
மசாலாவிற்கு : இஞ்சி பியூரி - 1 தேக்கரண்டி, பூண்டு பியூரி - 1 தேக்கரண்டி, மிளகுத் தூள் - 2 தேக்கண்டி, அமுல் கிரீம் - 50 கிராம், க்ரீமி மில்க் - 100 கிராம், லெமன் கிராஸ் பியூரி - 1 தேக்கரண்டி, கொத்துமல்லி பியூரி - 1 தேக்கரண்டி
செய்முறை : பனீர் துண்டுகளை சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர் மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு விழுதாக கலந்துக் கொள்ளவும். அதில், நறுக்கிய பனீர் துண்டுகளை புரட்டி 4 மணி நேரம் ஊரவிடவும். பின்னர், பனீர் துண்டுகளை ஒரு கம்பியில் சொருகி, நெருப்பில் இரண்டு பக்கமும் நன்றாக சுடவும். மலாய் பன்னீர் தயார். 

ADVERTISEMENT

மஷ்ரூம் கபாப்

தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம்
மசாலாவிற்கு: கோநட் க்ரீம் - 25 மி.கி, உப்பு ,மிளகு - தேவைக்கேற்ப, கொத்துமல்லி தழை, வேர்கடலைப்பொடி - 50 கிராம், பூண்டு - 50 கிராம், இஞ்சி - 15 கிராம், லெமன் கிராஸ் - 10 கிராம், பச்சை மிளகாய் - 15 கிராம், ஆலிவ் எண்ணெய் - 75 மில்லி கிராம், சீஸ் - 15 கிôரம்
செய்முறை: காளானை அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆலிவ் எண்ணெய், சீஸ் தவிர, மற்ற மசாலா அனைத்தையும் அரைத்து கொள்ளவும். அரைத்த மசாலாவுடன் காளானைப் புரட்டி, அத்துடன் ஆலிவ் எண்ணெய்யும் சேர்த்து 25 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். நன்கு ஊறிய காளானை எடுத்து அதன்மேல் சீஸை வைத்து 2-5 நிமிடங்கள் வரை சுட வேண்டும். கொத்துமல்லி முதலியவற்றை தூவி சிறிது எலுமிச்சை சாறினை பிழிந்தால் அருமையான மஷ்ரூம் கபாப் ரெடி. 

க்ரில்ட் பேபி பொட்டேடோ

தேவையானவை: பேபி பொட்டேடோ (குட்டி உருளைக்கிழங்கு)- கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, குடைமிளகாய் - 1 துண்டு
மசாலாவிற்கு: உப்பு, மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி, கொத்துமல்லி - 5 கிராம், பூண்டு - 15 கிராம், இஞ்சி - 15 கிராம், இனிப்பு சோயா சாஸ் - சிறிது, எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 10 மி.கி
செய்முறை: குட்டி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்னர், பச்சை மிளகாய், குடைமிளகாய் இரண்டையும் அடுப்பை பற்ற வைத்து அதில் நேரடியாக சுட்டுக் கொள்ளவும். பின்னர், அதன் மேல் தோலினை நீக்கிவிட்டு, அதனுடன் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வேக வைத்த பேபி பொட்டேடோவை அதில் புரட்டி 1 மணிநேரம் ஊறவிடவும். பின்னர், உருளைக்கிழங்கை ஒரு மெல்லிய கம்பியில் சொருகி, நெருப்பில் சுட்டெடுக்க வேண்டும். சுவையான க்ரில்ட் பேபி பொட்டேடோ தயார்.

க்ரில்ட் பைனாப்பிள்

தேவையானவை: பைனாப்பிள் - 200 கிராம்
மசாலாவிற்கு: உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, எண்ணெய் - 25 கிராம், ஸ்ரீரச்சா சாஸ் - 25 கிராம், லெமன் கிராஸ் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 தேக்கரண்டி, பூண்டு - 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி வேர் - 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு - 1தேக்கரண்டி
செய்முறை: பைனாப்பிளை தோல் நீக்கி முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை மசாலா விழுதில் புரட்டி 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர், பைனாப்பிள் துண்டுகளை நெருப்பில் சுட்டெடுக்கவும். க்ரில்ட் பைனாப்பிள் தயார். 
- ஸ்ரீ

ADVERTISEMENT
ADVERTISEMENT