மகனுக்குத்தான் முதலிடம்! சானியா மிர்ஸா

சென்ற ஆண்டில் சானியா டென்னிஸ் விளையாடவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் 2018 ஆம் ஆண்டினை சானியா மிர்ஸா மறக்க மாட்டார். காரணம் அழகான மகனை சானியா பெற்றது
மகனுக்குத்தான் முதலிடம்! சானியா மிர்ஸா

சென்ற ஆண்டில் சானியா டென்னிஸ் விளையாடவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் 2018 ஆம் ஆண்டினை சானியா மிர்ஸா மறக்க மாட்டார். காரணம் அழகான மகனை சானியா பெற்றது 2018 அக்டோபர் 30 - இல். இழான் மிர்ஸா மாலிக் என்று சானியா பெயர் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். திருமணம் 2010 -இல். 2018-இல் குழந்தை பாக்கியம். மனதில் சந்தோஷ மழை என்றாலும் சங்கடமும் சானியாவுக்கு இருக்கத்தான் செய்கிறது. "டென்னிஸ் விளையாட முடியாமல் போய்விட்டதே..' என்று ஆதங்கப்படுகிறார்.
 டென்னிஸ் ஆட்டத்தில் தொடர்ந்து கிடைத்து வந்த வெற்றிகள்.. பிரபல டென்னிஸ் ஆட்ட வீராங்கனை, இப்போது தாயாகவும் மாறியிருக்கிறீர்... எல்லாமே நீங்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு சானியா சொன்னது:
 நடப்பவை எல்லாம் நல்லதிற்காகத்தான் நடக்கிறது. நான் எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. இப்படி நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் இல்லை. நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டியிருந்தோம். அது வேண்டியது போல் நடந்திருக்கிறது. தாயானதில் பெருத்த சந்தோஷம் தான். வாழ்க்கையின் அது ஓர் அபூர்வ தருணம்.. நிகழ்வு. மகனை முதன் முதலாக நான் கையில் ஏந்தியது வாழ்க்கையில் மறக்க முடியா தருணம்.
 காலில் ஏற்பட்ட காயத்தால் உங்களால் சில மாதங்கள் டென்னிஸ் ஆட முடியவில்லை. பிறகு கர்ப்பம். பிரசவம்.. இவற்றால் நீங்கள் டென்னிஸ் ஆட முடியாமல் போனது. டென்னிûஸ விட்டு விலகி நின்றது வருத்தத்தைத் தந்ததா..
 கண்டிப்பாக.. டென்னிûஸ மிஸ் செய்தது உண்மைதான். கூடவே போட்டிகளையும், வெற்றிகளையும் தவற விட்டிருக்கிறேன். ஆனால் அந்த இழப்புகளை ஈடு காட்டும் விதமாக அழகான மகன் கிடைத்து விட்டானே.. இன்னும் சில மாதங்களில் விளையாடத் தொடங்கி விடுவேன்.. 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதற்காக பயிற்சிகளை தொடங்கியே ஆக வேண்டும். பிரசவம் முடிந்து உடல்நிலை தேறுவதற்காகக் காத்திருக்கிறேன். கனவு கண்ட பலவும் எனக்கு கை கூடியுள்ளது. இப்போது என் மகனுக்குத்தான் முதலிடம். முக்கியத்துவம். என்னால் எது முடியுமோ அத்தனையும் அவனுக்குத் தருவேன்... செய்வேன்... அதற்காக டென்னிûஸ விட்டுவிட மாட்டேன். குழந்தை பெற்றதனால் லட்சியங்களை விட்டு விட வேண்டும் என்றில்லையே... குழந்தை.. டென்னிஸ்.. இந்த இரண்டையும் கையாள நான் என்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
 கர்ப்பமாகி ஏழாவது மாதம் கூட டென்னிஸ் ஆடியதாக செய்திகள் வந்தனவே..
 ஆம்... உண்மைதான்... பிரசவத்திற்கு சில இரவுகள் முன்னதாகக் கூட டென்னிஸ் பந்தினை அடித்துப் பழகினேன். விளையாட்டு வீராங்கனையாக இருந்தது கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியது.
 உங்கள் திருமண பந்தம் குறித்து பலவித செய்திகள் வலம் வந்தன .. இப்போது மகன் பிறந்திருப்பதால் அந்த செய்திகள் வலுவிழந்துவிடும் அல்லவா..
 எனது திருமண பந்தம் உறுதியாக இருக்கிறது என்று யாரிடமும் நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. எங்களுக்கு இப்போது குழந்தை வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.. பெற்றுக் கொண்டோம். வேறு எதையோ நிரூபிக்க வேண்டும் என்பதற்காக குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சானியா மிர்ஸா.
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com