எளிய யோசனைகள்!

குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.
எளிய யோசனைகள்!

  குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.
  முகம் பார்க்கும் கண்ணாடியை நாளிதழ் காகிதத்தால் துடைத்தால் பளபளப்பாகும்.
  எண்ணெய் மற்றும் நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்த பிறகு சோப்பினால் கழுவினால் சுத்தமாகும்.
  உப்பு கலந்த நீரில் துணியை முக்கி வைத்து பத்து நிமிடத்துக்குப் பிறகு அலசினால் காப்பிக் கறை மறைந்து போகும்.
  முட்டைக் கோஸ் சமைக்கும்போது எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் கோஸ் வாசனை வராது.
  சாதம் செய்யும்போது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால் பிரியாணி கட்டி தட்டிப் போகாமல் இருக்கும்.
  வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்தால் நன்றாக வறுபடும்.
  பாயசம் வைக்கும்போது பாசிப்பருப்போடு அரிசியோ, ஜவ்வரிசியோ நன்றாக வேக வைத்த பிறகுதான் இனிப்பு சேர்க்க வேண்டும் .
  முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.
  உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேஜையில் ஈக்கள் தொல்லை குறையும்.
  கொதிநீரில் முக்கி எடுத்தால் போதும் தக்காளியின் தோல் எளிதாக வந்துவிடும்.
  சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து கொதிக்க வைத்தால் நெய் கெடாமலிருக்கும்.
  உப்பு கலந்த குளிர்ந்த நீரில் துணியை முக்கி வைத்த பிறகு சோப்பு உபயோகித்தால் துணி மீது படிந்த வாழைக்கறை மறையும்.
  கடலை மாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.
  பருப்பை வேக வைக்கும்போது சிறிது எண்ணெய் விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
  வெங்காயத்தை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு தோல் களைந்து நறுக்கினால் கண்ணிலிருந்து நீர் வராது.
 - நெ.இராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com