மகளிர்மணி

சிறுமியின் சாதனை..!

11th Dec 2019 12:46 PM

ADVERTISEMENT

விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தை ஒரு சிறிய மீன் தொட்டிக்குள் செய்து யோகாவில் உலக சாதனை படைத்திருக்கிறார்.
 முஜிதாவிற்கு ஒன்பது வயதாகிறது. பெற்றோர் கோவிந்தராஜ்-பார்வதி. முஜிதா செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி.
 சிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, பல யோகாசனங்களை சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகள் பெற்றுள்ளார். "நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' -இல் இடம் பிடிப்பதற்காக, ஒரு அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும், ஒன்றே முக்கால் அடி நீளமும் கொண்ட சிறிய மீன் தொட்டியில் இறங்கி "கண்டபேருண்ட' ஆசனத்தில் உடலை சுருட்டி தொட்டிக்குள் எட்டு நிமிடம் அமர்ந்து உலக சாதனை படைத்தார். செய்வதற்கு மிகவும் சிரமமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்தார் முஜிதா.
 முந்தைய சாதனையாக 2012-இல் அமைந்தது, சிறிய கண்ணாடி தொட்டிக்குள் நிகழ்ந்த மூன்று நிமிட யோகா அமர்வுதான். இந்த சாதனை சீனாவில் நடந்தது. முஜிதா சீனச் சிறுவனின் சாதனையை முறியடித்துள்ளார்.
 - அங்கவை

ADVERTISEMENT
ADVERTISEMENT