மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

11th Dec 2019 01:23 PM

ADVERTISEMENT

மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட் கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம், முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
• பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச் சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
• புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில் நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
• வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால் சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும். குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும். 
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். 
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT