"சிறுவயதில் படித்தபோது எங்கள் பள்ளியில், விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்படுமென்ற சலுகை இருந்தது. எங்கள் வீட்டில் இவைகளை வாங்கித் தர வசதி இல்லாததால், அந்த இலவசங்களைப்பெற ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினேன். இது எனக்கு மனநிறைவாகவும், திருப்தியாகவும் இருந்தது. பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் அரசாங்க வேலை கிடைக்குமென்று சொன்னதால் தொடர்ந்து ஓடத் தொடங்கினேன். சர்வதேச போட்டியில் தங்கம் பெற்றேன். ஒடிசாவில் அகாதெமி ஒன்றை அமைத்து. தடகள பயிற்சியளிக்க வேண்டுமென்பது எனது கனவாகும். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணமும் உள்ளது'' என்று கூறியிருக்கிறார் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்.
- அருண்