இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

22nd Mar 2022 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....

வீழ்வதும்
எழுவதும்
காற்றில்தான்...
நானொரு பறவை!

க. சரவணன்


சின்ன வயதில் கடித்துப் பார்த்த புல்.
கொஞ்சம் நீர்ச் சத்து.
கொஞ்சம் உப்புக் கரிப்பு.
கொஞ்சம் பச்சை வாசனை.
இன்றுவரை அப்படியே தான்
இருக்கிறது வாழ்வும்.

ADVERTISEMENT

வண்ணதாசன் சிவசங்கரன்

 

சின்ன வயதில் கடித்துப் பார்த்த புல்.
கொஞ்சம் நீர்ச் சத்து.
கொஞ்சம் உப்புக் கரிப்பு.
கொஞ்சம் பச்சை வாசனை.
இன்றுவரை அப்படியே தான்
இருக்கிறது வாழ்வும்.

வண்ணதாசன் சிவசங்கரன்

 

அதிகம் சிரிப்பதும்
புத்தகங்களோடுதான்...
ஆழ்ந்த மௌனத்தில்
அழுவதும்
புத்தகங்களோடுதான்...
புத்தகங்கள்,
காலத்தை மாற்றும்
இயந்திரங்கள்.

திவ்யா ராஜகோபால்

 

சுட்டுரையிலிருந்து...

 

மற்றவர்களிடம்,
உங்களைப் பற்றி 
எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே
இருக்காதீர்கள்.
அவர்களே கஷ்டப்பட்டு
தெரிந்து கொள்ளட்டும்.

குருநாதா


எனக்குத் தெரிந்தவைதாம் 
அல்லது
நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
இவ்வளவும்தான்
பிரபஞ்சமென
நினைத்துக் கொண்டிருந்தேன்.  
இப்போதுதான் தெரிகிறது,
எனக்கு அப்பாலும்
பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது
எனக்குத் தெரிந்தவற்றை விட
தெரியாதவை 
ஏராளமிருக்கின்றன.

செண்பகம்


யாரோ ஒருவரின் சொல் கேட்டு
நம்மிடம் முகம் சுழிக்கும் 
எந்தவொரு உறவும்...
நிச்சயம் நமக்கானவராய் 
இருக்க முடியாது.

இம்சை அரசி 


வலைதளத்திலிருந்து...

தமிழ் வினைச்சொல்லுக்கு இயல்பாகத் திரியும் குணம் உண்டு. காலம், பால் போன்ற விஷயங்களை வினைச்சொல்லே சுட்டி நிற்கும் பண்பும் உண்டு.

ஒரு உதாரணம்:

அவன் நன்றாக எழுதுகிறான்.

"எழுது' என்ற வினைச்சொல் இங்கே "எழுதுகிறான்' என்றாகிறது. "எழுதுகிறான்' என்பது வினையைக் குறிப்பதோடு காலம், பால் இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது. இது தமிழின் சிறப்புகளுள் ஒன்று.

ஓர் ஆங்கில வினைச்சொல்லை நாம் தமிழ் வாக்கியத்தில் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஆங்கில வினைச்சொல்லுடன் "செய்' அல்லது "பண்ணு' என்பதைச் சேர்த்தால் மட்டும்தான் அது முழுமையான வினைச்சொல்லாக ஒரு தமிழ் வாக்கியத்தில் வெளிப்படும்.

"குக்' எனும் ஆங்கில வினைச்சொல்லை எடுத்துக் கொள்வோம். இதை ஒரு தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்படித்தான் எழுத முடியும்:

அவன் நன்றாக குக் செய்தான்; அவன் நல்லா குக் பண்ணினான்.

சுஜாதா பாணியில், "குக்கினான்' என்று சிலர் சொல்ல விரும்பலாம்; அதைப் பொதுவழக்காகக் கொள்ள முடியாது. 

தமிழ் வாக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றம் என்னவென்றால், தமிழ் வினைச்சொல்லைப் பயன்படுத்தும்போதும் ஆங்கில வினைச்சொல்லைப் பயன்படுத்துவதைப் போல "செய்' சேர்த்து எழுதுகிறோம் என்பதுதான்.

"அவன் நன்றாக சமையல் செய்தான்' இப்படி எழுதத் தொடங்கியிருக்கிறோம். இப்படி எழுதும் பழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? 

"அழகா ஸ்மைல் பண்றான்ல', "ஹெல்ப் பண்றேன்னு சொன்னியே', "ட்ரை பண்ணித்தான் பாரேன்', "வொர்க் பண்ணிட்ருக்கேன்' -  பேசும்போது இப்படியாக ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்துவதால், தமிழ் வினைச்சொற்களையும் அப்படியே தமிழில் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. அதனால், தேவைப்படாத இடங்களில் கூட "செய்' ஒட்டிக் கொண்டுவிடுகிறது. இதனால், இயல்பாகத் திரியும் வினைச்சொற்களின் பண்பை மறந்து, இப்படி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 

மேலே குறிப்பிட்டிருப்பதுபோல அல்லாமல் "செய்' சேர்த்து எழுதும்போது என்ன நடக்கிறது? காலம், பால் போன்றவற்றைத் தாங்கி நிற்கும் குணத்தை வினைச்சொல் இழக்கிறது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT