இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை 

பணி: அசிஸ்டன்ட் சீனியர் ஆபீசர்ஸ்  

காலியிடங்கள்: 15 

தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசுத் துறைகளிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ பணியாற்றி இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.44,900 - ரூ1,42,400

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  www.eci.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: www.eci.gov.in அல்லது https://drive.google.com/file/d/1eYQD6K6Se06Gd_Bn22GA_sQBq7kEGDvI/view  என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.01.2022 


இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: தலைமை ஆசிரியர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: தமிழ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். 

பணி: ஆகம ஆசிரியர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: ஏதாவதொரு வேத ஆகம பாட சாலையில் (வைணவம்) 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.  

பணி: எழுத்தர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.  

பணி: சமையலர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: சமையல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்ய சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் -602 105. 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.01.2022

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை


மொத்த காலியிடங்கள்: 04
பணி: ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர் (என்இ5)  

காலியிடங்கள்: 01

தகுதி: இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி:  அசிஸ்டன்ட் (ஃபைனான்ஸ்) (என்இ5) 

காலியிடங்கள்: 02
பணி : அசிஸ்டன்ட் (அட்மினிஸ்ட்ரேஷன்) (என்இ5)

காலியிடங்கள்: 01
தகுதி: மேற்கண்ட 2 பணியிடங்களுக்கும் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(எச்ஆர்) முடித்திருந்தால் விரும்பத்தக்கது.  

அனுபவம்: குறைந்தபட்சம்  2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை :  https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம்  அனுப்பி வைக்க வேண்டும்.   

முகவரி: ØLY¬: Joint General Manager (HR & Admin), 3rd Floor, Indian Railway Finance Corporation Limited, The Ashok, Diplomatic Enclave: 50-B, Chanakyapuri, New Delhi - 110021 

வடகிழக்கு பகுதி, ஜம்மு & காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவு, லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் இருந்து அனுப்பப்படும்  

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 01.02.2022. 

இதர பகுதிகளில் இருந்து அனுப்பப்படும்  விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  28.01.2022

ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை

பணி: புராஜெக்ட் டைரக்டர் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.1,50,000- ரூ.3,00,000

வயது வரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து deputation@ircon.org  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://indianrailways.gov.in அல்லது https://indianrailways.gov.in/railwayboard/uploads/irpersonel/Promotion_Posting/2021/VN%20No_%2043%20PD%20Katni.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.1.2022 


மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் வேலை

பணி: ஸ்டாப்  கார் டிரைவர் (ஆர்டினரி கிரேடு)  

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தியில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். வாகன பழுதுகளைச்  சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cgwb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The Regional Director, Central Ground Water Board, North Western Region, Bhujal Bhawan, Plot No. 3B, Sector -27A, Chandigarh-160019.

மேலும் விவரங்கள் அறிய: www.cgwb.gov.in  அல்லது http://cgwb.gov.in/Vacancies/Staff%20car%20Driver%20Group%20C.pdf  என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.01.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT