இளைஞர்மணி

செயற்கை நிலவு!

எஸ். ராஜாராம்


விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் சீனா, நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதன் "சாங்கே 4' விண்கலத்தின் ஆய்வு வாகனம் (ரோவர்) தற்போது நிலவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நிலவின் தென் துருவத்தில் ஓர் ஆய்வு நிலையத்தை 2029-ஆம் ஆண்டுக்குள் அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், காந்தப்புலத்தைப் பயன்படுத்தி ஈர்ப்பு விசையைக் குறைக்கும் திறன் கொண்ட செயற்கை நிலவு ஆராய்ச்சி மையத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் நிகழாண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

நிலவின் தரைப்பரப்பைப் போன்ற உணர்வை ஏற்படுத்த பாறைகளாலும், தூசுகளாலும் இந்த "செயற்கை நிலவு' நிரப்பப்படும். நிலவைப் போன்ற குறைந்த ஈர்ப்புவிசை சூழலில் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காக இந்த செயற்கை நிலவைப் பயன்படுத்தவுள்ளது சீனா. இதன்மூலம் இச்சோதனைகளை நிலவில் மேற்கொண்டால் அது வெற்றி பெறுமா என்று கணிப்பதற்கும், எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களைக் குடியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும் இந்த ஆராய்ச்சி மையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆண்ட்ரே கெய்ம் என்பவர் காந்தத்தின் மூலம் தவளையை மிதக்கச் செய்யும் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார். அதிலிருந்து உத்வேகம் பெற்று சீன விஞ்ஞானிகள் இந்தச் செயற்கை நிலவை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, இந்த செயற்கை நிலவு ஆராய்ச்சி மையத்தில் ஒரு வெற்றிட அறை ஏற்படுத்தப்பட்டு சக்திவாய்ந்த காந்தப்புலங்களைப் பயன்படுத்தி ஈர்ப்புவிசை குறைக்கப்படும். உலகிலேயே இதுபோன்ற ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

செயற்கை நிலவு மட்டுமன்றி, ஏற்கெனவே செயற்கை சூரியனையும் சீனா உருவாக்கியுள்ளது. அது ஓர் அணுக்கரு இணைவு உலை ஆகும். சூரிய வெப்பத்தைவிட 5 மடங்கு அதிக வெப்பத்தை இது உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT