இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

11th Jan 2022 06:00 AM | இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


இந்திய ராணுவத்தில் வேலை

தேர்வு  பெயர்: 
நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி & நேவெல் அகாடெமி எக்ஸாமினேசன் (ஐஐ) - 2022
மொத்த காலியிடங்கள்: 400
பிரிவு வாரியான காலியிடங்கள்: 

1. நேஷனல் டிஃபென்ஸ் அகாடெமி   - 370
(ஆர்மி - 208, நேவி-42, ஏர் ஃபோர்ஸ் -120) 

2. நேவெல் அகாடெமி - 30
வயது வரம்பு:  02.07.2003 - 01.07.2006-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க 
வேண்டும். 

தகுதி: நேஷனல் டிஃபென்ஸ் அகாடெமி  பணிக்கு ஏதாவதொரு பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேவி, ஏர் ஃபோர்ஸ் பணிக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2022

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை மற்றும் மதுரை எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2022 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: www.upsconline.nic.in  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான 

கடைசித் தேதி: 11.01.2022

 

பார்டர் ரோட்ஸ் விங் நிறுவனத்தில் வேலை

 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: மல்ட்டி ஸ்கில்டு வொர்க்கர் (பெயிண்ட்டர்)   
காலியிடங்கள்: 33

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க 
வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900 
வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

பணி: மல்ட்டி ஸ்கில்டு வொர்க்கர் 
(மெஸ் வெயிட்டர்) 
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: வெஹிக்கிள் மெக்கானிக்
காலியிடங்கள்: 293
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - ரூ.63,200 
வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (ஓஜி)  
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200  வழங்கப்படும். 
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு 
செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commandant, GREF, CENTRE, Dighi Camp, Pune - 411 015

மேலும் விவரங்கள் அறிய http://www.bro.gov.in/WriteReadData/linkimages/8241967746-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.01.2022


மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை

நிறுவனம்: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்

பணி: அசிஸ்டன்ட் என்ஜினியர் - டிசைன் (வயாடக்ட் & எலிவேட்டடு ஸ்டேஷனஸ்)  

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயது வரம்பு: 35வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க 
வேண்டும். 

பணி: செக்ஷன் என்ஜினியர் (ஆர்க்)   
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயது வரம்பு: 35  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆர்க்கிடெக்சர்ஸ் பிரிவில் பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பி.ஆர்க் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 3 ஆண்டு பணி அனுபவம் வேண்டும். 

பணி: செக்ஷன் என்ஜினியர் (டிசைன்)  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bnrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 

The General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru- 560 027

மேலும் விவரங்கள் அறிய:  
https://english.bmrc.co.in/FileUploads/2bdaed_CareerFiles.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.01.2022

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 05

பணி: லைப்ரரியன் 
பணி: ரிஜிட்ரர் 
பணி: கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன் 
பணி: டைரக்டர்  (பெரியார் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்)   
பணி: டைரக்டர், பிசிகல் எஜுகேஷன் 

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பிரிவில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: https://periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய: https://periyaruniversity.ac.in அல்லது https://www.periyaruniversity.ac.in/Recruitment.php என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.01.2022 

ADVERTISEMENT
ADVERTISEMENT