இளைஞர்மணி

வாட்ஸ்ஆப் கம்யூனிட்டி!

22nd Feb 2022 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் உள்ள வாட்ஸ்ஆப் தற்போது காட்சி புகைப்படத்துக்கும் (டிஸ்பிளே இமேஜ்)  முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி தற்போது ஃபேஸ்புக்கில் இருப்பதைப் போன்று காட்சிப் புகைப்படத்தில் பின்னூட்ட புகைப்படத்தை (கவர் போட்டோ) இணைத்து வைக்கக் கூடிய  புதிய சேவை அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ்ஆப் பீட்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்சிப் புகைப்படத்தில் ஒரே புகைப்படம் மட்டுமே வைக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் அனுமதி அளிக்கிறது.

பின்னூட்ட புகைப்படம் இணைக்கும் புதிய சேவை நடைமுறைக்கு வந்தால், அதற்காக தனி கேமரா பொத்தான் காட்சிப் புகைப்படத்தில் இடம் பெறும் என்றும் இதைப் பயன்படுத்தி பின்னூட்ட புகைப்படத்தை தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம் என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், "கம்யூனிட்டி' என்ற புதிய சேவையையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து கம்யூனிட்டிகளாக வைத்து, ஒரே தகவலை அந்தக் குழுக்களுக்கு அனுப்ப முடியும். தற்போது ஒரு தகவலை ஒவ்வொரு குழுக்களைத் தேர்வு செய்து அனுப்ப 
வேண்டியுள்ளது. ஆனால், இந்த புதிய கம்யூனிட்டி சேவை மூலம் ஒரே முறையில் பல்வேறு குழுக்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம். 

எனினும், இந்த கம்யூனிட்டியை நிர்வகிக்கும் அட்மினுக்குதான் அதிக அதிகாரம் இருக்கும். குழுக்களில் இடம் பெற்றவர்கள் பிற குழுக்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது. அதேநேரத்தில் இந்த கம்யூனிட்டியை விட்டு விலகிவிட்டால் குழுக்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் அவர்களுக்கு தெரியவராது.

இந்த இரண்டு சேவைகளும் முதலில் வாட்ஸ்ஆப் பிஸ்னஸூக்கு விரைவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் இந்த சேவைகள் வழக்கமான வாட்ஸ்ஆப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT