இளைஞர்மணி

வாட்ஸ்ஆப் கம்யூனிட்டிஸ்

அ. சர்ஃப்ராஸ்


2009-இல் தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவையில் முதலில் தனி நபர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. பின்னர் தனி நபர்களை இணைத்து குழுவாக மாறியது. தற்போது குழுக்களை இணைத்து சமூகமாக (கம்யூனிட்டிஸ்) மாற்றம் கண்டுள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர்களை கம்யூனிட்டிஸ் என்ற புதிய சேவையின் கீழ் இணைக்க முடியும். பல மாதங்களாக சோதனை முறையில் வாட்ஸ்ஆப் பீட்டாவில் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சேவை தற்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கம்யூனிட்டிஸ் சேவையில் அட்மின்களுக்குதான் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு துறையைச் சார்ந்த அனைத்து குழுக்களையும் கம்யூனிட்டிஸ் சேவை மூலம் ஒன்றாக இணைத்து ஒர் தகவலை அனைவருக்கும் ஒற்றை சொடுக்கில் அனுப்பி விடலாம்.

மேலும், சுமார் 32 பேர் வரை இணைத்து குழு தொலைபேசியையும் மேற்கொள்ளலாம். ஒரு குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை மற்ற குழுவினர் தெரிந்து கொண்டாலும், அவர்களின் தொலைபேசி எண்ணை மற்ற குழுவினர் காண முடியாது. எனினும், அட்மின்கள் மற்றவர்களின் தொலைபேசி எண்களைப் பார்க்க முடியும்.

கம்யூனிட்டியின் கீழ் உள்ள குழுக்களில், குறிப்பிட்ட ஒரு குழுவில் மட்டும் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பிற குழுவினரால் பார்க்க இயலாது.

தகவல் பரிமாற்ற குழுவைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அட்மின்களுக்கு மட்டும் உள்ளது.

உதாரணமாக, ஒரு பள்ளியின் பெற்றோர் குழுக்களை இணைத்து கம்யூனிட்டிஸ் உருவாக்கப்பட்டால் அதில் வகுப்புகளுக்கு ஏற்ப தகவல் பரிமாற்றம் அல்லது அனைவருக்கும் ஏற்ப தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

தற்போது 5 பேருக்கு மட்டும் ஒரு முறை தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் அளித்து வருகிறது. ஆனால் இந்த கம்யூனிட்டிஸ் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

இதேபோல், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் ஸ்டேடஸ் தகவலை யாரெல்லாம் பார்வையிட்டனர் என்பதை மறைக்கும் சேவையையும் வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

SCROLL FOR NEXT