இளைஞர்மணி

ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்!

26th Apr 2022 06:00 AM

ADVERTISEMENT

 

நாட்டிலேயே முதல் ரயில்வே பல்கலைக்கழகமாக 2018-இல் தொடங்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள தேசிய ரயில், போக்குவரத்து நிறுவனத்தில் (என்ஆர்டிஐ) 2022-23-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

இரு பாலருக்கும் தனித்தனியே நவீன விடுதிகள், 100 சதவீதம் வரையில் உதவித்தொகை, உலகளாவிய கல்வி- தொழில் கூட்டாண்மை, அதிநவீன பசுமை வளாகம் போன்ற நல்ல கட்டமைப்பு வசதிகளோடு, யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய கல்வி அமைப்புகளின் வழிகாட்டுதல்களுடன் ரயில்வே பல்கலைக்கழகம் இயங்குகிறது.

தற்போது பி.டெக், பிபிஏ., பி.எஸ்சி, முதுநிலை படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

போக்குவரத்து நிர்வாகத்தில் பிபிஏ (3 ஆண்டு), போக்குவரத்து தொழில்நுட்பத்தில் பி.எஸ்.சி (3 ஆண்டு), பி.டெக். ரயில் உள்கட்டமைப்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக். ரயில் அமைப்புகள் மற்றும் தொடர்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக். இயந்திர மற்றும் ரயில் பொறியியல் (4 ஆண்டு) ஆகிய இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

போக்குவரத்து நிர்வாகத்தில் எம்பிஏ, விநியோக சங்கிலி நிர்வாகத்தில் எம்பிஏ, போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் எம்.எஸ்.சி., போக்குவரத்து தகவல் அமைப்புகள் மற்றும் பகுப்பாய்வுகளில் எம்.எஸ்.சி., ரயில்வே சிஸ்டம்ஸ் பொறியியல் மற்றும் ஒருங்கிணைப்பில் எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், நுழைவுத் தேர்வுக்கான கூடுதல் தகவல்கள், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவற்றை https://www.nrti.edu.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT