இளைஞர்மணி

பாறைகளை ஆவியாக்கும்  வெப்பம்!

12th Apr 2022 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் தனித்துவமான மர்ம உலகங்களைக் கண்டறிந்து வரும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி, பாறையைக்கூட ஆவியாக்கும் அளவுக்கு வெப்பநிலை கொண்ட ஒரு வித்தியாசமான கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.

இந்தத் தொலைநோக்கி புதிதாக கண்டறிந்துள்ள, வியாழன் கிரகத்தையொத்த இரு கிரகங்களில் ஒன்றில்தான் 3,000 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை காணப்படுகிறது. டைட்டானியம் போன்ற வலிமையான உலோகங்களைக்கூட ஆவியாக்கும் அளவு அதிக வெப்பநிலை கொண்டது.

அவற்றில் பூமியிலிருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்துக்கு டபிள்யுஏஎஸ்பி-178பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் வளிமண்டலம் முழுவதும் சிலிகான் மோனாக்ûஸடு வாயுவால்நிரம்பியுள்ளது. 

ADVERTISEMENT

இக்கிரகத்தின் பகல் வேளை பக்கமானது மேகமற்று இருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், கிரகத்தின் இரவு வேளை பக்கமானது மணிக்கு 2,000 மைல் வேக சூறாவளியுடன் கடுமையான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.

அதிகாலை மற்றும் அந்திசாயும் பொழுதில்கூட பாறைகளை ஆவியாக்கும் அளவுக்கு வெப்பநிலை அங்கு காணப்படுகிறது. பூமி அதன் துணைக் கோளான நிலவைக் கொண்டிருப்பதைப் போல, இந்தக் கிரகம் அதன் நட்சத்திரத்தைக் கொண்டிருக்கிறது.

வியாழன் கிரகத்தையொத்த மற்றொரு கிரகத்துக்கு கேஇஎல்டி-20பி என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கிரகத்தில், அதன் தாய் நட்சத்திரத்திலிருந்து வரும் புறஊதா ஒளியானது அதன் வளிமண்டலத்தில் ஒரு வெப்ப அடுக்கை உருவாக்குகிறது. இதுவரை ஒரு தாய் நட்சத்திரம் ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நேரடியாக ஏற்படுத்தும் மாற்றங்களை நாம் அறிந்ததில்லை. இப்போது அதற்கான தரவுகள் கிடைத்துள்ளன என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.

இந்தக் கிரகங்களைப் பற்றிய ஆய்வு முடிவுகள் "ஜர்னல் நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT