இளைஞர்மணி

இன்ஸ்டாகிராமில் புதிய சேவைகள்...

12th Apr 2022 06:00 AM | - அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT

 

புகைப்படம், குறு விடியோக்களை (ரீல்) பகிர உதவும் மிட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய சேவைகளை அறிவித்துள்ளது.

இளைஞர்கள் விதவிதமான குறு விடியோக்கள், வண்ணமயமான புகைப்படங்கள் ஆகியவற்றை உடனடியாக பகிர்வதற்கு இந்த இன்ஸ்டாகிராம் உதவுவதால் அனைவரின் மத்தியிலும் பிரபலமாகி உள்ளது. பயனாளர்களை அதிகரிக்க இன்ஸ்டாகிராம் புதிய சேவைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

தற்போது, இûணையதளத்தில் தேடலில் ஈடுபட்டிருக்கும்போதே தகவல் பரிமாற்றத்தில் (சாட்) பதில்களை அனுப்பலாம். இதற்காக இணையதள தேடலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை.

ADVERTISEMENT

ஒருவருக்கு தகவல் பரிமாற்றத்தை எந்தவித முன்னெச்சரிக்கை தகவலும் எழாமல் (நோட்டிபிகேஷன்) அமைதியான முறையில் அனுப்பவும், 30 வினாடி விடியோக்களை பாடல்களுடன் இணைத்து பகிரவும் இந்த புதிய சேவை உதவுகிறது.  இதில் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் ஆகியவற்றில் இருந்தும் பாடல்களை இணைத்துக் கொள்ளலாம். தகவல் பரிமாற்ற செய்யும் சாட் பகுதியிலேயே பாடல்கள் இணைக்கப்பட்ட விடியோவை காணலாம். தகவல் பரிமாற்ற குழுவில் (குரூப் சாட்) கருத்துக் கணிப்புக்கான வாக்குகள் பதிவை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யார் யாரெல்லாம் தகவல் பரிமாற்றம் செய்ய தயார் நிலையில் உள்ளனர் என்பதை இன்பாக்ஸ் அருகே தெரிந்து கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசேஞ்சரைப்போல் இது இருக்கும்.

புகைப்படம், ரீல் விடியோக்களை உடனடியாக பகிரவும் புதிய வசதி அளிக்கப்பட்டுள்ளது. பகிர்வதற்கான பொத்தனை சிறிது நேரம் அழுத்தினால் அடிக்கடி நாம் பகிர்ந்த நான்கு பயனாளர்களின் பெயர்கள் வெளிப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT