இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்


நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

பணி: நிர்வாக அதிகாரி (பொது)

காலியிடங்கள்: 300

சம்பளம்: மாதம் ரூ.32,795 - ரூ.62,315

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2021

ஆயில் இந்தியா நிறுவனத்தில்  வேலை

பணி:  வொர்க் பெர்சன்

காலியிடங்கள்: 535
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1.எலக்ட்ரிகல்  - 38
2. ஃபிட்டர்  - 144
3. மெக்கானிக் - மோட்டார் வெஹிகில்   - 42
4. மெஷினிஸ்ட்  - 13
5. மெக்கானிக் டீசல்  - 97
6.   எலக்ட்ரானிக் மெக்கானிக் -40
7. பாய்லர் அட்டென்டன்ட் - 08
8.  டர்னர்  - 04
9.  டராப்ட்ஸ்மேன்  - 11
10.  இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்  - 81
11.  சர்வேயர்   - 05
12.  வெல்டர்  - 06
13. ஐடி அண்ட் இஎஸ்எம்/ சிடிஎம்/ ஐடி  - 05
14.  சயின்ஸ்  - 44

தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.26,600 - ரூ.90,000

வயது வரம்பு: 23.09.2021 தேதியின்படி 18  வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.oil-india.com/Document/Career/Updated_Online_Advertisement_for_Technical_Posts.pdf என்ற லிங்க்கில் கிளிக்  செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.09.2021

தமிழக அரசில் வேலை
 

பணி:  அசிஸ்டன்ட் ஜியாலிஜிஸ்ட்

காலியிடங்கள்: 26 

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது முதல்  30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: புவியியல் பிரிவில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம்   ரூ.37,700 -  ரூ.1,19,500   வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வானது தாள் ஐ, தாள் ஐஐ என்ற முறையில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை, வழக்குத் துறை  

பணி:  அசிஸ்டன்ட் பப்ளிக் புரோசிகியூட்டர்  

மொத்த காலியிடங்கள்: 50  

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,77,500 வழங்கப்படும். 

வயது வரம்பு :   34 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மை  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். தெளிவான விவரங்கள் அறிய அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.   

மேலும் விவரங்களை அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

நிர்வாகம்: இண்டஸ்டிரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட்

பணி:  அசிஸ்டன்ட் டைரக்டர் ஆஃப் ட்ரெயினிங்

காலியிடங்கள்: 06

சம்பளம்:  மாதம்  ரூ.56,100 - ரூ.1,77,500 வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு:  24 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.

தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் என்ஜினியரிங், டெக்னாலஜி பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.  மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.150 விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/11_2021_PRINCIPAL_ITI_AD_ENG.pdf  என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in  அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.9.2021



கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

பணி: பிசினஸ் டெலப்மெண்ட் அசோசியேட்

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயது வரம்பு: 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தேதி, இடம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.kvb.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT