இளைஞர்மணி

ஓர் இணையதளம்... 10 ஆயிரம் தகவல்கள்!

பி.ராஜகுமாரி


மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எழுதுபவர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள், நடந்த நிகழ்வுகள்,   உலக அளவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என ஏராளமான தகவல்கள் நிரம்பி வழிகின்றன.  அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் எது தொடர்பான கேள்விகளைக் கேட்பார்கள் என்று உறுதியாக ஒருவர் சொல்ல முடியாது. உலகம் தழுவிய அளவில் உள்ள  எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பதோடு, அதை மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளவும் வேண்டும். 

தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அதே தகவல்கள் காணொலி காட்சிகளாக  நம் கண்முன் காட்டப்பட்டால் அவை நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதே உண்மை. 
உலகம் முழுக்க உள்ள பல நாடுகள் தொடர்பான பல்வேறு தகவல்களை காட்சி வடிவில், ஒலி வடிவில்  ஓர் இணையதளம் தருகிறது.  

உதாரணமாக,  சில தகவல்களைச் சொல்லலாம்:

2019 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தில் இருக்கிறது.
உலகில் அண்டார்க்டிகா பகுதியில் மட்டுமே 90% நன்னீர் கிடைக்கிறது.
ஓர் அழகிய முகம், ஓர்  அழகான உடலை விட அதிகமான பேரைக் கவர்ந்திழுக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. 
ஒருவரது உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தின் எடை 4 பவுண்டுகள். 
அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 100 விவாகரத்துகள் நடைபெறுகின்றன.
கரப்பான் பூச்சிகள் தலையில்லாமலிருந்தாலும், ஒரு வாரம் வரை உயிருடன் இருக்கும். அவை, உணவில்லாமல்தான் பெரும்பான்மையாக இறக்கின்றன.
கடந்த 500 ஆண்டுகளில் மனிதன் 322 வகையான விலங்குகளை முற்றிலுமாக அழித்துவிட்டான்.   
கூகுள் முதலில் பேக்ரப்  எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டது.  
ஒருவரின் நாசி 50,000 வெவ்வேறு நறுமணங்களை நினைவில் கொள்ளக்கூடியது. 
ஆல்கஹாலை அருந்திய ஆறு நிமிடங்களில், ஆல்கஹால் உட்கொண்டவரது மூளை செல்கள் எதிர்வினையாற்றத் தொடங்கிவிடும்.  

இவ்வாறு பல்வேறு உண்மைத் தகவல்களை ஸ்லைடு ஷோ வடிவில் வழங்கக்கூடிய ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

முகப்புப் பக்கத்தில்  ரேண்டம் ஃபேக்ட்ஸ்    எனும் தலைப்பின் கீழ் சில ஸ்லைடு ஷோ இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு படக்காட்சித் தகவலின் கீழும் அந்தத் தகவலுக்கான ஆதாரம்   இடம் பெற்றிருக்கும் தளத்திற்கான இணைப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. 

இங்கு உலகம், வரலாறு, சமூகம், இயற்கை எனும் நான்கு முதன்மைத் தலைப்புகளும், அதன் கீழாகப் பல்வேறு துணைத்தலைப்புகளும், அதன் கீழாக பல்வேறு உள் தலைப்புகள் என்று தகவல்கள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, தளத்தின் கீழ்ப்பகுதியில்   212 தலைப்புகளும் தரப்பட்டிருக்கின்றன. 

குறிப்பிட்டத் தலைப்பில் சொடுக்கினால், அந்தத் தலைப்பிலான பக்கத்திற்குச் செல்கிறது.   முதலில் தோன்றும் ஒரு தகவலைப் படித்து முடித்தவுடன், அடுத்தத் தகவலுக்குச் செல்வதற்கு அம்புக்குறியீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று முந்தைய தகவலைக் காண்பதற்கும் அம்புக்குறியீடு தரப்பட்டிருக்கிறது. 

இதே போன்று இத்தளத்தில் இதுவரை பத்தாயிரம் தகவல்கள் வரை ஸ்லைடு ஷோ காட்சிகளாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

போட்டித் தேர்வுக்காக இல்லாவிட்டாலும், இங்குள்ள சுவையான தகவல்களைப் படிப்பதற்காகவாவது https://www.f​a​ctslides.​com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT