இளைஞர்மணி

காமன்வெல்த் சிறுகதைப் போட்டி தமிழில் எழுதலாம்!

19th Oct 2021 06:00 AM | -  மு. சுப்பிரமணி

ADVERTISEMENT

 

காமன்வெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியினை 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தஅமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கானசிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகிஇருக்கிறது.

காமன்வெல்த் நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, கனடா மற்றும் ஐரோப்பா,கரீபியன், பசிபிக் என்று ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிரிக்க மண்டலத்தில் 19 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும், ஆசிய மண்டலத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளும், கனடா மற்றும் ஐரோப்பா மண்டலத்தில் 4 நாடுகளும், 2 பெருங்கடல் பிரதேசங்களும், கரீபியன் மண்டலத்தில் 12 நாடுகளும், 6 பெருங்கடல் பிரதேசங்களும், பசிபிக் மண்டலத்தில் 11 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

ADVERTISEMENT

இச்சிறுகதைப் போட்டிக்கு ஆங்கிலம், வங்காளம், சீனம், பிரெஞ்ச், கிரேக்கம், கிஸ்வாகிலி, மலாய், போர்த்துக்கீசு, சமோவன், தமிழ், துருக்கீஷ் என்று 11 மொழிகளில் சிறுகதைகளை எழுதிச் சமர்ப்பிக்க முடியும். இவை தவிர, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எந்த ஒரு மொழியிலான சிறுகதையினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தும் சமர்ப்பிக்கலாம்.
இப்போட்டியில் பங்கேற்பதற்குமுன்பாகக் கீழ்க்காணும் விதிமுறைகளையும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

*காமன்வெல்த் நாடுகளில்குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் இந்தச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க முடியும்.

*மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை உட்பட அனைத்துச் சிறுகதைகளும், சிறுகதையின் ஆசிரியராலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

*ஒருவர் ஒரு சிறுகதையினை மட்டுமே சமர்ப்பித்திட வேண்டும்.

*மின் விண்ணப்பப் படிவத்தின்வழியாக மட்டுமே சிறுகதையினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

*சமர்ப்பிக்கப்படும் சிறுகதைகள் பங்கேற்பாளரின் சொந்தக் கதைகளாக இருக்க வேண்டும். மேலும்,அந்தக் கதை இதற்கு முன்பாக இதழ்கள்,சிறுகதைத் தொகுப்புகள், இணையதளங்கள் என்று எதிலும் வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது.

*இதே போன்று, இதற்கு முன்பு காமன்வெல்த் சிறுகதைப் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கதைகளாகவும்இருக்கக் கூடாது.

* சமர்ப்பிக்கப்படும் சிறுகதைகள் 2000 சொற்களுக்குக் குறைவில்லாமலும், 5000 சொற்களுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.

*சிறுகதைகள் ஆங்கிலத்தில் ஏரியல் எழுத்துருவில் 12 எனும் அளவில், இரு கோடுகள் இடைவெளியில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண், கதையின் தலைப்பு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

*போட்டிக்கான சிறுகதைகள், சிறுகதையின் தலைப்புப் பெயரில் பிடிஎஃப் கோப்பாகப் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிடிஎஃப் வடிவத்தில் சமர்ப்பிக்க இயலாத நிலையில் வேர்டு கோப்பாகவும் சமர்ப்பிக்கலாம். சிறுகதை, காமன்வெல்த்சிறுகதை என்று பொதுவான தலைப்பாக இருக்கக் கூடாது.

*கதையின் அமைப்பு, வகை, கரு என்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கதை வயது வந்தவர்களுக்கானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டதாக இருக்கக்கூடாது.

*சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதைகள் பங்கேற்பாளரின் நாட்டைப் பொறுத்து மதிப்பிடப்படும்.

*இதற்கு முன்பு காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் பங்கேற்று ஒட்டு மொத்த வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மீண்டும் இப்போட்டியில் கலந்து கொள்ளஇயலாது. மண்டல அளவில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

*ஐந்து மண்டலங்களுக்கும் தனித்தனியாக பரிசுக்குரிய ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஐந்து கதைகளிலிருந்து ஒட்டு மொத்தபரிசுக்குரிய கதையாக ஒரு கதை தேர்வு செய்யப்பட்டு, அக்கதைக்கு சி5,000 பரிசுத்தொகை வழங்கப்படும். மற்ற நான்கு கதைகளுக்கும் சி2,500 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

*இப்போட்டி குறித்த கூடுதல் தகவல்களுக்கும், முந்தைய போட்டிகள் மற்றும் பரிசு பெற்றவர்கள் குறித்த தகவல்களுக்கும் https://www.commonwealthwriters.org/shortstoryprize/info/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.

*போட்டிக்கான சிறுகதைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 1-11-2021.

Tags : Ilaignarmani Commonwealth Short Story
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT