இளைஞர்மணி

விண்வெளிக்குச் சென்ற நடிகை!

19th Oct 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT


விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை அமெரிக்க நிறுவனங்கள் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்காக ஒரு குழுவை அனுப்பியுள்ளது ரஷியா.

சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ஆம் ஆண்டிலிருந்து பூமியின் மேற்பகுதியில் சுற்றி வருகிறது. நாசா மற்றும் அதன் சர்வதேச கூட்டாளிகளுக்கான ஆராய்ச்சித் தளமாக ஐஎஸ்எஸ் இருந்து வரும் நிலையில், முதல்முறையாக அங்கு திரைப்படப் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்காக ரஷியாவின் சோயுஷ் விண்கலத்தில் நடிகை யூலியா பெரசில்ட், இயக்குநர் கிளிம் சிபென்கோ, விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

விண்வெளியில் படப்பிடிப்பு என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதிலும் அமெரிக்கா, ரஷியா இடையே போட்டி நிலவியது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூûஸ விண்வெளி சர்வதேச விண்வெளிக்கு அனுப்பி படப்பிடிப்பு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டிருந்த நிலையில், அதில் ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் முந்திக்
கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக ரஷிய தொலைக்காட்சியான சேனல் ஒன், ஸ்டூடியோ யெல்லோ, பிளாக் அண்ட் ஒயிட் ஆகியவற்றுடன் ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

"தி சேலஞ்ச்' என்ற தலைப்பிலான திரைப்படத்துக்கான படப்பிடிப்பு சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக நடிகையும் இயக்குநரும் நிகழாண்டு தொடக்கத்தில் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றனர். இவர்கள் 12 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.

விண்வெளி தொடர்பான ஏராளமான அறிவியல் கதைகளைக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. விண்வெளியிலேயே படப்பிடிப்பு நடத்தி உருவாகும் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ilaignarmani space
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT