இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 314

12th Oct 2021 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க மனிதவளத்துறை அமைச்சர் தன் சகாக்களுடன் வந்திருக்கிறார். வீரபரகேசரியின் ராணியான லலிதாங்கி ஓர்  ஒற்றுப் பிரச்னையைப் பற்றி மிகுந்த கோபத்துடன் பேச வந்தவர், கவனம் சிதறி கோபம் தணிந்து வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார். 

வீரபரகேசரி அமைச்சர் பரிவாரத்தை நோக்கி: என்னய்யா என் அமைச்சரவையின் ஊழல் பெருச்சாளிகள், திருடர்கள் எல்லாம் கூட்டமாக சேர்ந்து வந்திருக்கிருக்கிறீர்கள்? 

அமைச்சரின் பரிவாரம் மன்னரை நோக்கி தரையில் விழுந்து கும்பிடுகிறது: மன்னர் மன்னா, நீங்கள் எங்களை நோக்கி கூறிய இன்சொற்களால் மகிழ்ந்தோம். பணிந்து வணங்குகிறோம். 

வீரபரகேசரி: சுரணை கெட்டவனுங்க. As they say, birds of a feather flock together.

ADVERTISEMENT

கணேஷ் ஜூலியிடம்: மன்னர் இவர்களை மண்புழுக்களுடன் அல்லவா ஒப்பிட வேண்டும்? ஏன் பறவைகளுடன் ஒப்பிடுகிறார்? 
ஜூலி: அது ஒரு பழமொழி. அதாவது proverb. அதன் பொருள் ஒரே சுபாவம் உள்ளவர்கள் இயல்பாகவே ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது. People of similar type, interest, personality, character, or other distinctive attribute tend to mutually associate. அதாவது வானத்தில் சில குறிப்பிட்ட இனத்து பறவைகள் ஒரே கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா, அது போல தவறான நோக்கத்துக்காக கூட்டு சேரும் மக்களைப் பகடி செய்கிற பழமொழி இது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஊழல். ஒருவர் ஊழல் செய்யும் போது அதற்கு வழிவகுத்துக் கொடுக்க, அதை நிர்வகிக்க, அதற்கு பாதுகாப்பளிக்க, பணத்தைக் கொடுக்க, வாங்க என பல தளங்களில் ஆட்கள் கூட்டமாகச் செயல்படுவார்கள். They are birds of the feather. இதில் of a feather என்றால் of a plumage எனப் பொருள். அதாவது ஒரே ள்ல்ங்ஸ்ரீண்ங்ள்- ஐச் சேர்ந்த பறவைகள் எனப் பொருள் வரும். 
வீரபரகேசரி: என்னய்யா, மனிதவளத் துறை அமைச்சரே, கடந்த இரண்டாண்டுகளில் நீர் ரொம்ப வளமாயிட்டீர் போல. உளவுத்துறை மூலம் எனக்கு ரிப்போர்ட் எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறது. 
மனிதவளத்துறை அமைச்சர்: மன்னாதி மன்னா, அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான சேதி. I am as honest as a mirror.  
கணேஷ்: என்ன கண்ணாடியில் பார்த்தால் கரடி பொம்மை தெரியுங்கிறாரா? 
ஜூலி: சேச்சே, நீ ஏன் வடிவேலுவை எல்லாம் இழுக்கிறே? அவர் சொல்றது வேறொரு சொலவடை. கண்ணாடியில் பார்த்தால் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே எந்த பாசாங்கும் மிகையும் இல்லாமல் தெரியும். அந்த கண்ணாடி பிம்பத்தை போன்று நாணயமானவர் அவராம். பொய்யே சொல்லாதவராம். 
கணேஷ்: கேட்டதும் நெஞ்சு வலிக்கிறது. 
மனிதவளத்துறை அமைச்சர்: I am as honest as the day is long. 

கணேஷ்: நாள் முழுக்க நாணயமா இருப்பாரா?
ஜூலி: கரெக்ட். A consistently reliable person. அதான் இதோட பொருள். நாள் முழுக்க வெயில் அடிக்கிறது. பளிச்சென்று வெளிச்சம் நிலைக்கிறது. அப்போது எல்லாமே துலக்கமாகத் தெரிகிறது. இப்படி பகல் நீடிக்கும் வரை எந்த ஒளிவுமறைவும் இருப்பதில்லை. இந்த துலக்கமான, ஒளிவுமறைவற்ற பகற்பொழுதைப் போன்று நாணயமானவர் என as honest as the day is longக்கு அர்த்தம். 
கணேஷ்: அடடா... 
வீரபரகேசரி (நக்கலாக): க்க்கும்... உனக்குப் பொருத்தமான ஒரு சொலவடையை நான் சொல்லட்டுமா? 
மனிதவளத்துறை அமைச்சர்: தங்கள் கருணை மன்னவா. 
வீரபரகேசரி: You are honest as a cat when the meat is out of reach. 

கணேஷ்: பூனை நாணயமா இருக்குமா? 
ஜூலி: இது ஒரு செமையான பகடி சொலவடை. என்ன பொருள் எனத் தெரிகிறதா?  
கணேஷ்: ம்ஹும்... இதையும் நீயே விளக்கி விடேன்.

(இனியும் பேசுவோம்)

Tags : Ilaignarmani Come let us sspeak English
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT