இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்

தமிழக உணவு பாதுகாப்புத்துறையில் வேலை

பணி: லேப் டெக்னீசியன் கிரேடு - II

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400

வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி: வேதியியல், பயோவேதியியல் பிரிவில் பி.எஸ்சி., முடித்திருப்பதுடன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னிசியன் படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், டிஎம்எல்டி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய : http://www.mrb.tn.gov.in/pdf/2021/LT_Grade_II_TNFSSS_09112021.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2021

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்நிறுவனத்தில் வேலை

பணி: யங் புரொஃபெசனல்

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயது வரம்பு: 01.11.2021 தேதியின்பிடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேலாண்மை அல்லது பொறியியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மேலாண்மை பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய : https://careers.bhel.in/bhel/static/Advt_YP_CE09_2021.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2021



ஐஐடி- சென்னையில் வேலை

பணி: அசிஸ்டன்ட் புரொபஸர் (கிரேடு-I/II)

காலியிடங்கள்: 49

சம்பளம்: மாதம் ரூ.70,900 - 1,01,500

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: முதல் வகுப்பில் முனைவர் பட்டம் அல்லது அதற்கு நிகரான பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் கூடுதல் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற விவரங்கள் அறிய: https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.12.2021


பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை

மொத்த காலியிடங்கள்: 15

பணி: டேடா சயின்டிஸ்ட் - 09

கிரோடு வாரியான காலியிடங்கள்:

1. கிரேடு எஸ்எம்ஜி / எஸ் - IV - 01
சம்பளம்: மாதம் ரூ. 76,010 - ரூ.89890
வயது வரம்பு: 32 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. கிரேடு எம்எம்ஜி / எஸ் - III - 02
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - ரூ.78,230
வயதுவரம்பு: 28 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. கிரேடு எம்எம்ஜி / எஸ்- II - 06
சம்பளம்: மாதம் ரூ. 48,170 - ரூ.69,180
வயதுவரம்பு: 25 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டேட்டா என்ஜினியர் - 06

1. கிரேடு எம்எம்ஜி / எஸ்-III - 02
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - ரூ.78,230
வயதுவரம்பு: 28 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. கிரேடு எம்எம்ஜி / எஸ்-II - 04
சம்பளம்: மாதம் ரூ. 48,170 - ரூ.69,180
வயதுவரம்பு: 25 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், டேடா சயின்ஸ், மெஷின் லேர்னிங் அண்ட் ஏஐ ஆகிய பிரிவுகளில் பி.டெக், பி.இ., எம்.டெக், எம்.இ. என ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணி பிரிவுக்கும் தனித்தனியான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 + வரி, பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 + வரியையும் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.12.2021

தமிழக வனத்துறையில் வேலை

பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் - 03

தகுதி: அனாடமி பிரிவில் எம்.வி.எஸ்சி பட்டம் அல்லது விலங்கியல், வைல்ட் லைப் பயாலஜி பிரிவில் எம்.எஸ்சி பட்டம், பயோடெக்னாலஜி அல்லது மாலிக்குலர் பயாலஜி அண்ட் ஜெனடிக்ஸ் அல்லது ஜெனடிக் என்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் - ரிசர்ச் பிரிவுகளில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இன்டெர்ன்ஷிப் புரோகிராம் - 1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000 - ரூ.30,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஹண்ஜ்ஸ்ரீழ்ற்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுவிவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.aiwc.res.in/assets/images/Announcement%20(Revised).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.12.2021

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் வேலை

பணி: சயின்டிஸ்ட் "சி' மற்றும் சயின்டிஸ்ட் "டி'

மொத்த காலியிடங்கள் : 33

தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பம் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : சயின்டிஸ்ட் "சி' பணிக்கு 35 வயதுக்குள்ளும் சயின்டிஸ்ட் "டி' பணிக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,09,200 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment-delhi.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுபிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்ப தாரர்கள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரினீங் தேர்வு, தனிப்பட்ட தொடர்பு தேர்வு, நேர்முகத்தேர்வு அடிபட்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய: www.nielit.gov.in ApXÕ https://recruitment-delhi.nielit.gov.in/PDF/MeitY/Detailed_Advt_Scientit_C_and_D.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.12.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT