இளைஞர்மணி

ஷார்ட்கட் கீ...  இணையதளம்!

30th Nov 2021 10:00 AM | மு. சுப்பிரமணி 

ADVERTISEMENT

 

கணினிப் பயன்பாட்டில் அனுபவமுடையவர்கள் கணினியில் சில செயல்பாடுகளுக்கு விசைப்பலகையில்  சில குறுக்கு விசைகளைப் (ஷார்ட்கட்) பயன்படுத்தி தங்களுடைய செயல்களை எளிமையாக்கிக் கொள்வதுண்டு. கணினிப் பயன்பாட்டில் சில குறுக்கு விசைகள் பொதுவானதாக இருக்கின்றன. ஆனால் கணினி தொழில்நுட்ப  வளர்ச்சிக்கேற்ப புதிதாக உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் இயங்குதளங்கள், மென்பொருள்கள் போன்றவற்றுக்கு  பல புதிய குறுக்குவிசைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குறுக்கு விசைகளை நாம் அறிந்து கொண்டால் நம்முடைய பணிகளை மேலும் விரைவாகச் செய்ய முடியும். பல்வேறு இயங்குதளங்கள், மென்பொருள்கள் பயன்பாட்டில் இடம் பெற்றிருக்கும் குறுக்கு விசைகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள ஓர்  இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அந்த இணையதளத்தில் மைக்ரோசாப்ட் ஆப்ஸ், அடோப் ஆப்ஸ்,    கூகுள் ஆப்ஸ், வெப் ப்ரவுசெர்ஸ், இ மெயில் புரோகிராம்ஸ்,  போட்டோ/ இமேஜிங், மீடியா, எச்டிஎம்எல் எடிட்டர்ஸ் ஆகிய  முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

முதன்மைத் தலைப்புகள் ஒவ்வொன்றையும் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் அட்டவணை ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இங்கு அப்ளிகேஷன்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம்,  கேட்டகரி, சப் கேட்டகரி, வென்டார் எனும் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

ADVERTISEMENT

இதில் பயன்பாட்டின் கீழ் முதன்மைத் தலைப்புகளுடன் தொடர்புடைய மென்பொருள்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆபரேட்டிங் சிஸ்டம் எனும் தலைப்பின் கீழ் அந்த மென்பொருள் இயங்கும் தளம் குறித்த தகவலும், கேட்டகரி என்பதன் கீழ் அந்த மென்பொருள் எந்தப் கேட்டகரியின் கீழ் பயன்படுத்தப்படுகிறது என்கிற தகவலும், சப் கேட்டகரி எனும் தலைப்பின் கீழ் மென்பொருள் பயன்படுத்தப்படும் கேட்டகரியின்  சப் கேட்டகரி குறித்த தகவலும், கடைசியாக வென்டார் எனும் தலைப்பின் கீழ் அந்த மென்பொருள் வெளியீட்டாளர்/ வென்டார் குறித்த தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கு பயன்பாட்டின் கீழாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மென்பொருள் பெயரின் மேல் சொடுக்கினால், குறிப்பிட்ட மென்பொருளுக்கான ஷார்ட்கட் கீ பக்கத்திற்குச் செல்கிறது. அந்தப்பக்கத்தில் குறிப்பிட்ட மென்பொருளின் பல்வேறு பயன்பாடுகள் குறித்த தலைப்பின் கீழ் ஷார்ட்கட் கீ  மற்றும் அதன் செயல்பாடு குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. இவை தவிர, ஃபங்ஷன் கீய்ஸ்,  ஷிப்ட் + ஃபங்ஷன் கீய்ஸ்,  கண்ட்ரோல் + ஃபங்ஷன் கீய்ஸ்,  கண்ட்ரோல் + ஷிப்ட்+ ஃபங்ஷன் கீய்ஸ்,   ஆல்ட் + ஃபங்ஷன் கீய்ஸ், ஆல்ட் +ஷிப்ட்+ ஃபங்ஷன் கீய்ஸ், கண்ட்ரோல் + ஆல்ட் +ஷிப்ட்+ ஃபங்ஷன் கீய்ஸ் எனும் தலைப்புகளின் கீழும்  ஷார்ட் கட் கீ  மற்றும் அதன் செயல்பாடு குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. 

இதன் வழியாக இந்த இணையதளத்தில் பல்வேறு மென்பொருள்களில் பயன்படுத்தப்படும் ஷார்ட்கட் கீ   செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இது போல் பகுப்புகளின் வழியாகவும் குறிப்பிட்ட பயன்பாட்டு மென்பொருள்களின் ஷார்ட்கட் கீ செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

இத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் அவ்வப்போது புதிய ஷார்ட்கட் கீ  செயல்பாடுகள் குறித்த செய்திகள் இடம் பெற்று வருகின்றன. இதுபோல் இங்கு இல்லாத சில மென்பொருள்களுக்கான ஷார்ட்கட் கீ செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெற விரும்பினால், இந்த இணையதளத்தின் தொடர்பு மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவித்தால், குறிப்பிட்ட மென்பொருளின் ஷார்ட்கட் கீ   செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு இத்தளத்தில் பின்னர் வழங்கப்படுகிறது.  

பல்வேறு மென்பொருட்களுக்கான ஷார்ட்கட் கீ செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ்ஷ்ப்.ஸ்ரீர்ம்/ எனும் இணைய முகவரிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags : Ilaignarmani Website
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT