இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

30th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....


ஒவ்வொன்றும் அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது.
மனமே!
தோட்டக்காரன்
நூறு வாளிகள் நீருற்றினாலும்,
பருவம் வரும்போதுதான்
கனி தோன்றும்.

க. மோகனரங்கன்


வழியெங்கும் பூக்கள்...

கடந்து செல்கிறான் யாத்திரிகன்,
கூடவே காற்றும்!

ADVERTISEMENT

வதிலை பிரபா

 

விடாது அடித்த பேய் மழைக்கு...
அடி மனதில் 

ஈரமே இல்லை.

 

கண்ணன் புலமை

மழையில் ஒண்டுகிறான்
நடைபாதைச் சிறுவன்;
குளிரில் நடுங்குகிறது
என் கவிதை.

ஆரூர் தமிழ்நாடன்

 

சுட்டுரையிலிருந்து...

உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், 
என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது.  
பணம் இடையில் வந்தது. ஆனால் ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.
-சார்லி சாப்ளின் 

சுந்தர் அந்தோணி

 

வார்த்தைகளுக்கு மட்டும் வதை செய்யும் திறனிருந்தால்...
எல்லா அநீதிகளுக்கும் தண்டனை கிடைத்திருக்கும்.

இறைவி

 


கண்டவன் கிட்ட ஆயிரம் "ஸாரி' கேட்போம்,
ஆனா பிடிச்சவங்க கிட்ட கேட்க ஆயிரம் தடவை யோசிப்போம்.

கோழியின் கிறுக்கல்


ஒரு வாசல் அடைத்தால் 
மறுவாசல் திறப்பான். 
அப்படியும் இல்லையென்றால்...
ஜன்னலையாச்சும் 
திறப்பான் இறைவன்.

குசும்பன்


வலைதளத்திலிருந்து...

புத்தர், "ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால், அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிக பெரிய ஆசான்' என்கிறார்.  நம் கண்கள் எதைப் பார்த்தும் வியந்து விரிவதில்லை. மாறாக, பல விஷயங்களுக்கு ஓர் அலட்சிய பார்வையை மட்டுமே உதறிச் செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய் களவாடிக் கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை. சிந்தனைகளும் இல்லை. 
ஆல்பட் கேம்யூஸ், "நாம் சிந்திக்கும் போதுதான் நிலைகுலைந்து போகிறோம்' என்கிறார். அப்படி வியந்து ஆர்வம் கொண்டு தேடி சிந்தித்து நிலை குலைந்து நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும்போதுதான் புதிதாய் கற்றுக் கொள்கிறோம். 
இதைக் கற்றுக்கொடுத்து இப்படி ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதைகூடங்களாய் மாறிய நிலையில், ஏன் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும்? என்ற கேள்வி மேலோங்கி நிற்கிறது. இன்று பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு? நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தி திரியும் மொபைல் போன்கள் ஓர் ஆசிரியரைவிட எல்லாவிதத்திலும் அதிக தகவல்களை தர முடியும்.  வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளை கையாள சொல்லித் தருவதும் ஓர் ஆசிரியரின் பணிதான் என்பதை நம்மில் பலர் மறந்துவிட்டோம்.
மனிதன்  வாழ்வில் ஒவ்வோர் அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்கிறான். மரணத்தை மட்டுமே அவனால் அனுபவித்து கற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. எனினும் ஒரு காய்ந்த இலை அவனுக்கு மரணத்தையும் கற்றுக் கொடுத்து விடுகிறது. நாம் யாரும் கவனம் பகிர்ந்திடாத ஓர் இலை இவ்வளவு 
கற்றுக் கொடுக்க முடியும் என்றாலும், ஓர் ஆசிரியர் இதை அவதானிப்பதற்கான பக்குவத்தையாவது நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாமா?  
http://bavachelladurai.blogspot.com/

Tags : Ilaignarmani On the Internet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT